கோபிசெட்டிபாளையம்: பள்ளி வாகனங்கள் விபத்தை தவிர்க்கும் வகையில், பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த
ஆண்டில் பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானதால், குழந்தைகள் பலர்
உயிரிழந்தனர். பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது
குறித்து, ஆர்.டி.ஓ., தலைமையில், வட்டார போக்குவரத்து அதிகாரி, மாவட்ட
கல்வி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 12 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள
தமிழக அரசு உத்தரவிட்டது.கோபி தாலுகாவுக்கு உட்பட்ட கோபி, பவானி,
சத்தியமங்கலம் ஆகிய யூனியனில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு
மேற்கொள்ள கோபி ஆர்.டி.ஓ., பழனிசாமி தலைமையில் ஆர்.டி.ஓ., ஜெயக்குமார்,
சி.இ.ஓ., ஸ்ரீதேவி, டி.எஸ்.பி.,க்கள் ராமசாமி, முத்துசாமி, ஆறுமுகம்
உள்ளிட்ட, 12 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோபி தாலுகாவில் மூன்று
யூனியனில், 36 தனியார் பள்ளிகளில், 177 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இக்குழுவினர் நேற்று, முதல் கட்டமாக, 84 வாகனங்கள் நேற்று ஆய்வு
செய்யப்பட்டது.கோபி ஒத்தகுதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜீனியரிங் கல்லூரி
வளாகத்தில், 84 வாகனங்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டனர். பள்ளி வாகனத்தில் முதலுதவி சிகிச்சை பெட்டி
வைக்கப்பட்டுள்ளதா?, சிகிச்சைக்கு தேவையான மருந்து உள்ளதா? பள்ளி வாகன
பராமரிப்பாளர், போலீஸ், ஆர்.டி.ஓ., அலுவலக டெலிஃபோன் எண் பதிவு
செய்யப்பட்டுள்ளதா?, அவரகால வழி, வாகன ஜன்னலில் இருபுறமும் ஐந்து செ.மீ.,
குறுக்கு கம்பி வைக்கப்பட்டுள்ளதா?, தீ விபத்து தடுக்கும் கருவி
வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.அரசு
விதிமுறைகளின்படி சில வாகனங்களில் பொருட்கள் வைக்கப்பட்டவில்லை.
அவற்றையும், பாதுகாப்பு கருவிகளையும் உடனடியாக வைக்க டிரைவர்களுக்கு,
குழுவினர் உத்தரவிட்டனர்.