கோபிசெட்டிபாளையம்:
நம்பியூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர், வீட்டுக்கு தீ வைத்ததில்
இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.
நம்பியூர் அருகே
ஆவராங்காட்டு கெடாரை பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பகவுண்டர், 84. இவரது
மனைவி வேலம்மாள். இவர்களுக்கு பழனிசாமி, 55, கனகரத்தினம், 47, ஆகிய இரண்டு
மகன்கள் உள்ளனர்.
இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை
பார்க்கின்றனர்.கடந்த மூன்று மாதத்துக்கு முன் வேலம்மாள், உடல் நல குறைவால்
இறந்து விட்டார். அதிலிருந்து சென்னியப்பகவுண்டனர் மனநலம் பாதிக்கப்பட்டு
இருந்தார். திருப்பூரில் வசித்த கனகரத்தினம், தந்தையை பார்த்துக்கொள்ள
குடும்பத்துடன் கெடாரைக்கு குடி பெயர்ந்தார்.நேற்று மாலை, 3 மணி அளவில்
சென்னியப்பகவுண்டர், மண்ணெண்ணெய் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்து விட்டார்.
அப்போது வீட்டுக்குள் கனகரத்தினம் மனைவி கஸ்தூரி, 35, குழந்தை கவியாழனி
ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென வீடு எரிவதை கண்டு, குழந்தையை
தூக்கிக்கொண்டு கஸ்தூரி வெளியில் ஓடி வந்து விட்டார்.தகவல் அறிந்த கோபி
தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடம் சென்று
தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஃபிரிஜ், ஃபேன், டி.வி., உள்பட இரண்டு லட்சம்
ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.