சேலம்:
சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம், தடையை மீறி எருதாட்டம்
நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர்களுக்கு, சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், "மெமோ'
கொடுத்தார்.ஆண்டு தோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம்
மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், ஜல்லிக்கட்டு, எருதாட்டம், வங்காநரி
ஆட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக, கிராமப்புற
கோவிலைச் சுற்றி, காளைகளை கயிறு கட்டி விரட்டி, அதனை இளைஞர்கள் பிடிக்கும்
எருதாட்டம் நடத்தப்படும்.இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த,
பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
விதிமுறைகள்
பின்பற்றாமல், சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு எருதாட்டம் நடத்த போலீஸார்
தடை விதித்தனர்.இதற்காக, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் உள்பட்ட பகுதிகளிலும்,
எருதாட்டம் நடத்தும் கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், முக்கிய
பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து, "எருதாட்டம் நடத்த மாட்டோம்' என போலீஸார்
எழுதி வாங்கிக் கொண்டனர். இதனால், நேற்று முன்தினம் காணும் பொங்கல்
தினத்தன்று, பெரும்பாலான கிராமங்களில், எருதாட்டம் நடக்கவில்லை.ஒரு சில
இடங்களில், தடையை மீறி எருதாட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து,
ஸ்டேஷன் போலீஸார் எந்தவித தகவலையும் தெரிவிக்காத நிலையில், சேலம்
எஸ்.பி.,க்கு, மாவட்டத்தில் சில இடங்களில், எருதாட்டம் நடத்தப்பட்டதாக
தகவல் கிடைத்தது.எனவே, தடையை மீறி தங்கள் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட
பகுதிகளில் எருதாட்டம் நடத்தப்பட்டதா? அவ்வாறு நடந்திருந்தால், அதற்கு
சட்டபடியான விளக்கம் அளிக்கும்படி, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர்,
இடைப்பாடி உள்பட சேலம் மாவட்டத்தில் பெரும்பலான ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர்களுக்கு, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், "மெமோ' கொடுத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.