புதுடில்லி: ""மத்திய அரசு அச்சகங்கள் அனைத்தும் உலக தரத்திற்கு நவீனப்படுத்தப்படும்,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
மத்திய அரசு அச்சகத்தின், 150வது ஆண்டு விழாவை, டில்லியில் துவக்கி வைத்து, அமைச்சர் கமல்நாத் பேசியதாவது:மத்திய அரசின் அச்சகங்கள் அனைத்தும், அரசு பணியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்ட அச்சகங்கள், பாரம்பரிய பெருமையும், வரலாற்று சிறப்பும் மிக்கவை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தற்போது, நாடு முழுவதும், 18 அச்சகங்கள் உள்ளன.
இதுதவிர, பாடப்புத்தகங்களை அச்சிடும் அச்சகங்களும் உள்ளன.வளர்ச்சியடைந்த நாடு என, நாம் கூறிக் கொள்ளும் இந்த நேரத்தில், அரசின் அச்சகங்களும் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அமைச்சர் கமல்நாத் பேசினார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சர் தீபா தாஸ்முன்ஷி, ""அச்சுத் துறை சம்பந்தமான அருங்காட்சியகம், கோல்கட்டாவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.