nilagiri districts news | உறைப்பனி பொழிவால் பாதிப்பு:தேயிலை செடிகளில் கவாத்து பணி| Dinamalar

தமிழ்நாடு

உறைப்பனி பொழிவால் பாதிப்பு:தேயிலை செடிகளில் கவாத்து பணி

Added : ஜன 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மஞ்சூர்;கடும் உறைப்பனி காரணமாக தேயிலை செடிகள் கவாத்து செய்யப்படுகிறது.மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தேயிலை தொழில் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு வாரமாக கடும் பனிபொழிவு நிலவி வருவதால், எடக்காடு, காந்திகண்டி, அட்டுபாயில், எமரால்டு, பேலிதளா, பெம்பட்டி, வேலிவியூ இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பனி பொழிவால் பசுந்தேயிலை மகசூல் அடியோடு குறைந்துள்ளது. இதனால், தேயிலை செடிகள் பாதிப்படையாமல் இருக்க, பெரும்பாலான தேயிலை விவசாயிகள் இந்த சமயங்களில் தேயிலை தோட்டங்களை கவாத்து செய்து பராமரிப்பு செய்து வருகின்றனர். "மூன்று மாதத்திற்கு பிறகு மே மாதத்திலிருந்து மழை பொழிவு ஏற்பட்டால், தேயிலை செடிகள் துளிர் விட்டு பசுந்தேயிலை வரத்து படிப்படியாக அதிகரிக்க கூடும்' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை