தூத்துக்குடி:தூத்துக்குடி
மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கிளை சேவைப்பகுதி
விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து சமத்துவ பொங்கலை ஆதனூர்
சிவலிங்கஈஸ்வர்-சக்திஈஸ்வரி கோயிலில் கொண்டாடினர்.விழாவிற்கு இந்தியன்
ஓவர்சீஸ் பாங்க் தூத்துக்குடி மண்டல மேலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் முதன்மை மேலாளர் பொன்னாண்டி, காட்டுநாயக்கன்பட்டி
கே.எஸ்.பி.எஸ்.நடராஜன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயராகவன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். எப்போதும்வென்றான் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மேலாளர்
சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவின் போது ஆதனூர் சுற்று வட்டார கிராம
பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
விளையாட்டு போட்டி மற்றும் கலை இலக்கிய போட்டி நடந்தது.
போட்டியில் வெற்றி
பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், இந்திய அளவில் 3000 மீட்டர்
ஓட்டப்பிபோட்டியில் முதல் இடம் பிடித்த காட்டுநாயக்கன்பட்டி
கே.எஸ்.பி.எஸ். நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கவேல்முருகன், மாநில
அளவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவர்
அபிஷேக்இளவரசன், மாநில அளவில் 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் இடம்
பிடித்த மாணவி முத்துலெட்சுமி, மாநில அளவில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில்
முதல் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரி மற்றும் சாதனை படைத்த பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு பரிசுகளை, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் தூத்துக்குடி மண்டல
மேலாளர் ராஜேந்திரன் வழங்கினார். தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
மண்டல மேலாளர் ராஜேந்திரன் விழாவில் கலந்து கொண்டு பேசினார். விழாவிற்கு
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மண்டல அதிகாரி முரளி, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
வேளாண்மை அதிகாரி சீனிவாசன், ஆதனூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர் செந்தூர்பாண்டி, ஆதனூர் விஏஓ.,அமினாபர்வின், உடற்கல்வி
இயக்குனர் மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட மக்காசோளம் உற்பத்தியாளர் கூட்டு
பொறுப்பு குழுத் தலைவர் திருமால், ஓட்டப்பிடாரம் வட்டார விவசாய விளை பொருள்
உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ராகவன், ஆதனூர் வீரபாண்டிய
கட்டபொம்மன் நபார்டு உழவர் மன்ற தலைவர் கம்பெனி செல்வகட்டபொம்மதுரை,
சத்தயசாயி சேவ கிராம சேவை ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், மிளகுநத்தம் நபார்டு
உழவர் மன்ற தலைவர் முத்துலிங்கம், விவசாயிகள், கிராம மக்கள், பள்ளி மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்ட நபார்டு உழவர்
மன்ற தலைவர் சண்முகமல்லுசாமி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.