மதுரை:மதுரையில் கழிவு அலுமினியங்களை சேகரித்து, கட்டியாக தயாரிக்கும் சிறு தொழிற்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. தேவையான அடிப்படை வசதிகளை செய்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.செல்லூர், மீனாட்சிபள்ளம், ஒத்தக்கடை, அவனியாபுரம், வில்லாபுரத்தில் அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, கிடைக்கும் அலுமினிய கழிவுகளை, சிறு தொழிற்கூடங்களை நடத்துவோர், 25 கிலோ மூடை ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர்.
பின், அவற்றை சல்லடையில் சலித்து சிறிய அலுமினிய துகள்களை சேகரிக்கின்றனர். அவற்றை உருக்கி அலுமினிய கட்டிகளாக தயாரிக்கின்றனர். மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ அலுமினிய கட்டிகளை (சராசரி விலை ஒரு கிலோ 75 ரூபாய்) விற்கின்றனர்.
கட்டமைப்பு இல்லை:கோச்சடை இரட்டை வாய்க்காலில் அலுமினிய கட்டிகள் தயாரிக்கும் ஜோசப் கூறுகையில், ""இத்தொழிலில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. என் பட்டறையில் நான், மனைவி உட்பட ஏழு பேர் வேலை செய்கிறோம். வேறு தொழில் தெரியாது. இத்தொழிலை முறையாக நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறு தொழிலுக்கான வங்கிக்கடனை மானியத்துடன் வழங்கினால் சிறு தொழில்கள் மேம்படும்,'' என்றார். வைகை ஆற்றின் கரையோரங்களில் கழிவு அலுமினியங்களை சேகரித்தும் அலுமினிய கட்டிகள் தயாரிக்கும் சிறு தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.