45 rape, 75 molestation cases reported in Delhi since Dec 16 | கற்பழிப்பு:45; பலாத்காரம்:77: தலைநகர் இன்னும் மாறவில்லை| Dinamalar

கற்பழிப்பு:45; பலாத்காரம்:77: தலைநகர் இன்னும் மாறவில்லை

Updated : ஜன 19, 2013 | Added : ஜன 19, 2013 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கற்பழிப்பு:45; பலாத்காரம்:77: தலைநகர்  இன்னும்  மாறவில்லை

புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை ‌மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ல் மரணமடைந்தார். இதனையடுத்து தலைநகர் டில்லியில் இது வரையில் வரலாறு காணாத அளவில் வயது வித்தியாசமின்றி , அரசியல் கட்சிகளை தவிர்த்த மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களை சமாதானப்படுத்த வந்த டில்லி முதல்வர் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு போராட்‌டம் தொடர்ந்து நீடித்தது. மக்களின் புரட்சியை கண்ட மத்திய அரசு அவசர அவசரமாக கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைக்கு கொண்டு வர பரிசீலனை செய்துள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற துவங்கியது.


மேற்கண்ட மாணவியின் இறப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தலைநகர் டில்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 26 வழக்குகளை தவிர்த்து பெரும்பாலானவை குடும்ப நண்பர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. .


தலைநகர் டில்லிக்குட்பட்ட பகுதிகளான கோவிந்தபுரி 21, சங்கம் விஹார் 17, மற்றும் ஷாகர்பூர் போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் கற்பழிப்பு வழக்கு 572-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 706 ஆகவும், பலாத்கார முயற்சி வழக்‌கு 2011-ல் 657-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 727 ஆகவும் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் 94 சதவீத வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ‌நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் மக்களிடை‌‌‌‌யே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாககூறினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்‌ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார்சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணிய‌ில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறினார்.


ஒரு லட்சம் மக்கள் தொகை கணக்கின் படி கடந்த 2005-ம்ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 4.42 லிருந்து 2012-ம் ஆண்டில் 4.15 ஆக குறைந்துள்ளதாக போலீஸ் புள்ளிவிவர கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளான புள்ளி விவர ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்களும், ஐந்து பாலத்கார முயற்சி சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala subramanian - chennai,இந்தியா
19-ஜன-201320:36:35 IST Report Abuse
bala subramanian நம்ப சட்டம் என்ன சொல்லுகிறது என்றால் எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கபடகூடாது என்பதற்காக வழக்கை நீட்டிப்பது which is basically wrong and has to be changed , for example if in a family a girl is raped all his family members will definitely become criminals if either the case is prolonged or if the judgement is letting out the criminal . So the right way is to give the judgement immediately like saudi arabian law , so that even though if the right criminal is not being punished the affected people will trust the law and other criminals will be afraid .
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
19-ஜன-201319:43:50 IST Report Abuse
Raja Singh உணவு ,நடை ,உடையில் பாரம்பரியம் மறந்து மேற்கத்திய கலாச்சாரம் . ஊழலில் திளைக்கும் அரசை தேர்ந்து எடுத்து இம்சைபட்டது போதாதுன்னு இப்போ இப்படி , பொறுத்திருங்கள் வெளிநாட்டில் இருந்து ஆண்களையும் தருவித்துகொடுக்கும் முட்டாள்களால் தேர்ந்துஎடுகப்பட்ட அரசு , சுயசிந்தனை இல்லாமல் மக்கள் இருக்கும் வரை இன்னும் பல நடக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
veeramani - chennnai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201314:10:18 IST Report Abuse
veeramani no good law
Rate this:
Share this comment
Cancel
mani - sugar let at singapore  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201314:07:59 IST Report Abuse
mani சட்டம் பத்தல
Rate this:
Share this comment
Cancel
k- sathis kumar - bangalore,இந்தியா
19-ஜன-201313:41:54 IST Report Abuse
k- sathis kumar அவர் கூறுகையில் மக்களிடை‌‌‌‌யே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாக கூறினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்‌ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார் சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணிய‌ில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறினார். : பாதிக்கப்பட்ட பெண் போலீசார் யாருகிட்டே போய் புகார் கொடுக்கணும்னு சொல்லலையே சார் .
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
19-ஜன-201312:14:26 IST Report Abuse
thirumalai chari எப்படிய்யா மாறும், என்னவோ இங்கே பல பேர் நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க. தலைநகரின் மக்கள் அடர்த்தி என்ன என்று யாருக்காவது தெரியுமா? தலைநகருக்கு தினம் வந்து போகும் ஜனத்தொகை கணக்கு தெரியுமா? அப்படி வருவதன் காரணம் தெரியுமா? தலை நகர் சுற்றியுள்ள, அதாவது வெகு சமீபத்தில் சுற்றியுள்ள மாநிலங்களின் பால் விகிதம் தெரியுமா? இதற்கு தகுந்த பதில் தெரிந்தால், தெரிந்துவிட்டால், இதற்கு விடிவு பாராளுமன்றத்தை தலைநகரில் இருந்து மாற்றவேண்டும், பால் விகிதத்தினை சீரமைக்க கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். தமிழக முதல்வரின் தொட்டில் குழ்ந்தை(பெண்) பாதுகாப்பு திட்டம்,நாடு முழுக்க செயல் படுத்தப்படவேண்டும். மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்ச்சி கொணர்ந்த திட்டம் போல ஒரு தொலை நோக்கு திட்டம் வேறெதுவும் கிடையாது. இது போன்ற திட்டமெல்லாம் சுயநலத் தலைவர்களுக்கு உதிக்காது, ஒரு பிரச்சினையில் தன்னை நிறுத்தி பகுத்தாராயும் திறன் கொண்ட தலைவர்களாலேயே முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201311:49:06 IST Report Abuse
Guru டெல்லியில் நடக்கிற கற்பழிப்புச் சம்பவங்கள் மற்ற 9 பெரு நகரங்களில் நடக்கிற அத்தகைய சம்பவங்களின் கூட்டு எண்ணிக்கைக்குச் சமமானது
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
19-ஜன-201311:47:25 IST Report Abuse
Sami These are less counting for us. Keep rising more. Because it is India
Rate this:
Share this comment
Cancel
Indian - Erode,இந்தியா
19-ஜன-201310:33:35 IST Report Abuse
Indian அந்நியன் படத்துல சொல்ற மாதிரி(இது திரு.சுஜாதா அவர்களின் வசனம்), இப்பிடி அரசாங்கம் சரியில்ல அதிகாரிகள் சரியில்லன்னு சொல்றோமே தவிர மக்கள் சரியா இருக்கொமங்கறது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
19-ஜன-201309:39:46 IST Report Abuse
Karam chand Gandhi காவல்துறை கணக்கை வைத்து சொல்ல முடியாது. ரூபாய் 1000 க்கு FIR போட்டு தரும் காவல்துறையும் உள்ளது. FIR போட்டு அதில் வரும் அரசாங்க பணத்தை அடிக்கும் காவல்துறையும் உள்ளது. பொய் வழக்கு பல ஆண்டுகளாக நடத்தாத வழக்குகள் உண்டு. முதலில் நேர்மையான நாட்டை உருவாக்க முயற்சியுங்கள் எல்லா வகையிலும், சட்டம் போட முயற்சிப்பது முட்டாள்தனமான நடவடிக்கை.
Rate this:
Share this comment
Indian - Erode,இந்தியா
19-ஜன-201310:39:08 IST Report Abuse
Indianமிகச்சரியாக சொன்னீர்கள்.. கேட்டா நாங்களும் லஞ்சம் கொடுத்து தானே வேலை வாங்கினோம்னு சொல்வாங்க.. ஆனா இவங்க பதவி காலத்துல அவங்க கொடுத்த லஞ்சத்தவிட பலமடங்கு பார்த்துருவாங்க... மக்களுக்கு போதும் என்ற மனம் எப்பவுமே வருவதில்லை, குறிப்பாக அரசாங்க அலுவலகத்தில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை