திருநெல்வேலி:நெல்லையை
சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நெதர்லாந்து நாட்டின் உயரிய விருதான "துலிப்'
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்டம் சேதுராயன்புதூரை
சேர்ந்தவர் மாரிமுத்து பரதன் (51). மனித உரிமை ஆர்வலரும், மனித உரிமை கள
இயக்குனருமான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக பணிகளை
மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட 66
விண்ணப்பங்களில் நெதர்லாந்து அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழு இவருக்கு
நெதர்லாந்து நாட்டின் உயரின விருதான துலிப் விருதுக்கு தேர்வு செய்தது.
இந்த
விருது கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 4 மனித உரிமை
போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய நாட்டை குறிப்பாக
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
ஒரு லட்சம் யூரோ, சான்றிதழ் ஆகியவற்றுடன் இவ்விருது வழங்கப்படுகிறது.இந்த
விருது வழங்கும் விழா கடந்த 9ம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில்
நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி
பாஸ்போர்ட்பை புதுப்பிக்க விண்ணப்பம் அளித்தார். ஆனால் இதற்கு அனுமதி
மறுக்கப்பட்ட நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை மாரிமுத்து
பரதனுக்கு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய, மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு
ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுவாமிநாதன் கூறியதாவது:நெதர்லாந்து
நாட்டின் உயரிய விருது பெற நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பாஸ்போர்ட்
அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கதக்கது.இந்த விருதை நெதர்லாந்து நாட்டிடம்
பெற்று அரசு சார்பில் சென்னையில் விழா ஏற்பாடு செய்து மாரிமுத்து பரதனுக்கு
வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விருது
அறிவித்த நெதர்லாந்து நாட்டிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும், இந்த
விரது பெற நெதர்லாந்து செல்ல அனுமதிக்காததை கண்டித்து கூட்டமைப்பு சார்பில்
விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பல்வேறு அமைப்புகள் இணைந்து
துலிப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாரிமுத்து பரதனுக்கு நெல்லையில்
பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்படும்.
இவ்வாறு அவர்
கூறினார்.பேட்டியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்
கார்த்திக், அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கம் மரியசெல்வி, தலித் பெண்கள்
எழுச்சி இயக்கம் வேலம்மாள், மனித உரிமை கள இயக்குனர் மாரிமுத்து பரதன்
ஆகியோரும் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.