திருநெல்வேலி:நெல்லையில் மதுக்கடை பார் ஊழியர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த இருவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
நெல்லை
அருகே அழகநேரி உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்
முத்தையா(45). தச்சநல்லூர் மேலக்கரை டாஸ்மாக் மதுக்கடை பாரில்
பணியாற்றினார்.தச்சநல்லூர் பெட்ரோல் பங்க் எதிரே பேச்சியம்மன் கோயில்
பின்புறம் ஆலமரத்தின் கீழ் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட
நிலையில் கடந்த 4ம் தேதி முத்தையா கிடந்தார். அவர் உடல் அருகே சுமார் 6
கிலோ எடையுள்ள ரத்தக்கறை படிந்த கல் கிடந்தது. இதுகுறித்து தச்சநல்லூர்
இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.வழக்கு
தொடர்பாக ராமையன்பட்டியை சேர்ந்த அரிச்சந்திரன்(26), வெள்ளப்பாண்டி(22)
கடந்த 8ம் தேதி அம்பாசமுத்திரம் ஜே.எம். கோர்ட்டில் சரண் அடைந்தனர். கோர்ட்
அனுமதி பெற்று இருவரையும் காவலில் எடுத்து நேற்று போலீசார் விசாரணை
நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.