திருப்பூர்:இளம்பிள்ளை வாத நோயை தடுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம், திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நாடு முமுவதும் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட, 18 கோடி குழந்தைகளுக்கு நாளை (20ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 657 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை இலவசமாக வழங்குகிறது. இம்மருந்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளிலும், சுகாதாரத்துறை நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாகவும் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 13 ஒன்றியங்களில் 1,068 மையங்கள், ரோட்டோரம் வசிப்பவர்கள், நாடோடிகளின் குழந்தைகள் பயன்பெற 44 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் 20 முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்துக்கு நான்கு பேர் வீதம் 4,500 சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.இவர்களது பணியை 143 மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வர். பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சொட்டு மருந்துகள் இன்றிரவு அல்லது நாளை காலை, அனைத்து முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கியதன் பயனாக, நம் நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் இளம்பிள்ளை வாத நோய் வரவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குமேல் நோய் பரவாமல் இருந்தால், சொட்டு மருந்து வழங்கும் பணியை நிறுத்திக்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவிடும்.இந்தாண்டு (2013) முடியும் வரை, எந்த குழந்தைக்கும் இளம்பிள்ளைவாத நோய் பரவாமல் இருந்தால், அடுத்தாண்டு சொட்டு மருந்து வழங்கும் பணி நிறுத்தப்படும்.
நம்நாட்டில் போலியோவை முற்றிலும் ஒழிக்க, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வரும் 20 மற்றும் பிப்., 24ம் தேதி, ஒன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க முன்வர வேண்டும், என்றார்.திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், 84 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படுகிறது. ஒரு மையத்துக்கு நான்கு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர் என 336 பேர் பணியில் ஈடுபடுவர். அவர்களை கண்காணிக்க 11 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியில் நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள் உட்பட 79 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். 350 மருத்துவ பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மையங்களில் காலை 7.00 முதல் மாலை 5.00 மணி வரை, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.