அவிநாசி:அவிநாசி அருகே தனியார் பள்ளி மாணவன், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டான்.சேவூர் - காமராஜ் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் மகேந்திரன், 14; அ.குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை, வகுப்பு முடிந்ததும், தாத்தா ஊரான பாளையக்காடுபுதூர், பெரிய தோட்டத்துக்குசென்றார்.தோட்டத்தில் செடிகளுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, மாலை 6.00 மணியளவில் குடித்து விட்டார். தகவலறிந்த மகேந்திரனின் தாத்தா சாந்தப்பன் மற்றும் உறவினர்கள், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே இறந்து விட்டார்.மகேந்திரனின் தாய் சித்ரா, சேவூர் போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். புகாரில், "பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் - வாங்கல் பிரச்னை தொடர்பாக, தன்னுடைய மகன், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்,' என, குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.