பொங்கலூர்:பெருந்தொழுவில், குடிநீர் கேட்டு, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர்.பெருந்தொழுவு ராசாக்கோவில் பகுதியில், 40 குடும்பங்களை சேர்ந்தமக்கள் வசிக்கின்றனர். அங்கு ஒரு போர்வெல் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, தண்ணீர் குறைந்து விட்டது. போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல், அருகிலுள்ள தோட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, நேற்று காலை 8.00 மணிக்கு, பெருந்தொழுவு நால்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த, ஊராட்சி தலைவர் கருப்பன் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, புதிதாக போர்வெல் போட்டு, தருவதாக உறுதியளித்தார். சமரசம் அடைந்த பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.