திருப்பூர்:ரூ.4.26 லட்சம் மானியத்துடன் கூடிய, 9.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் கருவிகள், விவசாயிகளுக்கு நேற்று வழங்கப்பட்டன.மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், வேளாண் இணை இயக்குனர் ஷெரீப் முன்னிலை வகித்தனர். அப்போது, வேளாண் பொறியியல் துறை சார்பில், 18 விவசாயிகளுக்கு 4.26 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.நான்கு சக்கர களை எடுக்கும் கருவி, இரண்டு சக்கர களை எடுக்கும் கருவி, "பவர் டிரில்லர்', மின் விசையால் இயங்கும் தட்டுவெட்டும் கருவி, மனித சக்தியால் இயக்கக்கூடிய தட்டுவெட்டும் கருவி, பண்ணை கழிவுகளை பொடியாக்கும் கருவி, விசைத்தெளிப்பான், "மொபைல் ஸ்டார்ட்டர்' உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 18 விவசாயிகளுக்கு, நான்கு லட்சத்து 26 ஆயிரத்து275 ரூபாய் மானியத்துடன் கூடிய, ஒன்பது லட்சத்து83 ஆயிரத்து 389 ரூபாய் மதிப்புள்ள கருவிகளை, கலெக்டர் வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.