அவிநாசி,:அவிநாசியில் நடந்த ஏ.வி.எம்., கோப்பைக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், புளியம்பட்டி அணி வெற்றி பெற்றது.அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏ.வி.எம்., கோப்பைக்கான மூன்றாவது ஆண்டு கிரிக்கெட் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. போட்டியை ஆனந்தாஸ் ஓட்டல் உரிமையாளர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். நாக்-அவுட் முறையில் நடந்த போட்டியில், இறுதி ஆட்டத்தில், திருப்பூர் லக்கி ஸ்டார் மற்றும் புளியம்பட்டி காராப்பாடி அணிகள் மோதின.காராப்பாடி அணி, வெற்றிக்கு தேவைப்பட்ட ரன் 74ஐ எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில், கோப்பையை வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், வேலாயுதம்பாளையம் திருப்பூர் குமரன் அணி வென்றது.பரிசளிப்பு விழாவுக்கு, இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன் தலைமை வகித்தார். சுந்தரமூர்த்தி வரவேற்றார். கோப்பையை டாக்டர் பாலச்சந்தர், பழங்கரை ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். "மேன் ஆப் தி மேட்ச்' விருது ரவிக்கும், "மேன் ஆப் தி சீரிஸ்' விருது கார்த்திக்கும் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற அணிக்கு கோப்பையுடன், ரூ.10,001, இரண்டாவது அணிக்கு ரூ.5,001, மூன்றாவது அணிக்கு ரூ.3,001 ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. போட்டிநிர்வாகி சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.