சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்கட்ட தேர்வு தேதி பிப்ரவரி 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 16ம் தேதி, துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேதி மாற்றப்பட்டது. விண்ணப்பிதற்கான காலக்கெடு ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, தேர்வு ஜனவரி 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் குரூப் 1 முதல்கட்ட தேர்வு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிப்ரவரி 16ம்தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.