சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில தலைமைச்செயலாளர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, சென்னை தலைமைச்செயலகத்தில் துவங்கியது. இதில் தமிழகம் சார்பில் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆந்திரா தலைமைச்செயலாளர் மினி மாத்யூ கலந்து கொண்டுள்ளனர். இரு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை சீரமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.