சென்னை: நெல்லையில் உள்ள சித்தா மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிய அடுக்குமாடி கட்டடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மருத்துவ கல்லூரிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு ரூ. 6.55 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஸ்டான்லி மருத்துவ கல்லூரிஅரங்கை புதுப்பிக்க ஒரு கோடி ரூபாயும், 31 மாவட்டங்களில் 34 மனவள மையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், இதற்காக ரூ. 2.51 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 3 மனவள மையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசின் செய்திக்குறிப்பில், 5 பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள் அமைக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.