ஜெய்ப்பூர்: ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவதை சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரையில், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர் என்ற இடத்தை நோக்கி வெகு வேகமாக முன்னேறி வருகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக ராகுல் போட்டியிட்டால், மோடியின் வேகத்திற்கு ராகுலால் ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்புகின்றனர். மோடி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை ஒப்புக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், அவருடன் ஒப்பிட்டால் ராகுல் அந்தளவிற்கு சிறந்த பேச்சாளர் என்று கூற முடியாது. மேலும், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் தமிழகம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலில், ராகுலின் தேர்தல் மந்திரங்கள் தவிடு பொடியாகியுள்ளன. இந்நிலையில், லோக்சபா தேர்தலை அவர் தலைமையில் எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, தனியார் டி.வி.,ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் சசிதரூர், ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும்பட்சத்தில், அவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார். சசிதரூரின் கருத்திற்கு உடனடியாக பதிலளித்த, கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ராகுலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இன்னும் காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வில்லை. அதற்குள் கருத்துக்கள் கூறி ராகுலுக்கு அழுத்தம் தர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
எனினும், சிந்தன் சிவிர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெரும்பான்மையானோர், இக்கூட்டத்திலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் ...பிரதமர் ஆவார்...மோடி பி ஜே பி வேட்பாளரா ?...பஞ்சயாத்தே முடியலே ...அதுக்குள்ளே தோள் துண்டு எனக்குத்தான் சொந்தம் என மோடி கனவு காண மாட்டார் ... 2014 லில் காங்கிரஸ் அதிக சீட் பெரும் .....கூட்டணி ஆட்சி வரும் ...பிரதமர் ராகுல்கந்திஜி தான்...அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் இந்த கணக்கு புரியும் ...காங்கிரஸ் என்றும் காந்தி குடும்பம் தான் .....2014 சுதந்திர கொடி எற்றும் பிரதமர் ராகுல்கந்திஜி தான் ..+.கூட்டி - கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ...இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ...மிலாடிநபி தின நல்வாழ்த்துக்கள் ....ஜெய் ஹிந்த் .
2014 கூட்டி கழித்து பாருங்கள் 2+0+1+4 = 7 இப்ப தெரியிதா மந்திரி சபையில் அமைசர்களின் எண்ணிக்கை 7 ,பதவி ஏற்பு தேதி 7 , இன்னும் எத்தனை 7 === இப்ப பிரதமர் யார் தெரியிதா? , தமிழனாக பிறந்து தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தெரிஞ்சிக்கலனா வேற யாருக்கு தெரிய போகுது? , அதே நேரத்தில் ஒரு செய்தியை உணருங்கள் சக அமைசர்களின் உச்சரிப்பு அடுத்த பிரதமர் அம்மா மட்டும்தான் , அப்படியும் ஒரு வாய்ப்பு இருக்குதுனா அப்பா தொங்கு பார்லிமென்ட் உறுதி :: பிரதான கட்சியின் தலைவர் சொல்கிறார் 2014 ல் காங்கிரெஸ், பா.ஜ.க அல்லாத ஒருவர்தான் பிரதமர் இந்த கூற்று உண்மையானால் பா.ஜ.க , கம்முனிஸ்ட், மற்ற இதர கட்சிகளின் ஆதரவுடன் 7 ராசிக்குரிய ஒருவர் அதிலும் தமிழகத்திலிருந்து பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளது . =============== தலைவா கூட்டி கழித்து பார்த்தீர்களா கணக்கு சரியா === நீங்க கணக்கு சொன்னதால ஒரு ஊகத்தில சொன்னேன் , எது நடந்தாலும் நம் உழைப்பில் தான் நாம் வாழ வேண்டும் , ஒட்டு போடும் போது இதுவரை ஆண்டவர்களின் செயல்களையும் , ஆள ஆசைபடுபவர்களின் செயல்களையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் , நல்லவர்கள் , நானயமானவர்களை தேர்ந்தெடுங்கள் , இந்த கணக்கு மட்டும்தான் சரியாக வரும் ==== நன்றி...
மோடி ஒரு செயல் வீரர், களத்தில் நின்று திறமையுடன் ஆடுபவர்.... ராகுல் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைபார்க்கும் கூட்டத்தில் ஒருவர்... ராகுலுக்கு தன் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் பல வழங்கப்பட்டு விட்டன... அனைத்திலும் மண்ணை கவ்விவிட்டார்... இவரை மோடியுடன் ஒப்பிடுவது... அறிவீனம்.. இந்தியாவிற்கு தேவை ஒரு திறமையான தைரியம்மிக்க வீரரே... எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் செயல்படாத பிரதமர்கள் இல்லை... விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது.... தீவிரவாத அச்சுறுத்தல் கவலை அளிக்கிறது.... தலைநகரில் வன்கொடுமை கவலை அளிக்கிறது... ஊழல் கவலை அளிக்கிறது... என்று எந்த பிரச்சனையையும் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், கவலை பட்டுக்கொண்டே இருக்கும் செயல்படாத ஒரு பிரதமர், இவரை ஆட்டிவைக்கும் நபர் அடுத்த பிரதமர்... என்று இவர்களே சொல்லிக்கொண்டால்... மக்கள் என்ன அவ்வளவு மடையர்களா.... ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதி வந்து விட்டது என்று இந்நாள் பிரதமர் பிதற்றுகிறார்.... கடந்த பத்து ஆண்டுகளாக நாற்காலியின் மீது போடப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த துணிப்போல இப்பதவியை அலங்கரித்து வரும் இவர்போலவே அவரும் இருப்பார் என்பதால இந்த பேத்தல்...எதை தின்றால் பித்தம் தெளியும்...காங்கிரச்சை படுத்தோல்வியில் இருந்து யாராவது மீண்டு எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு... காங்கிரஸ்சின் கொள்கைபடி, பிரதமர் பதவிக்கு தகுதியே தேவை இல்லை என்பதே ஒரே தகுதி.... இது மண்ணுக்கும், ராகுலுக்கும் இருக்கிறது...
ஒன்றும் புதிதல்ல ...பா ஜ ,அ தி மு க தவிர்த்து எல்லா கட்சிலேயும் வாரிசுகள்தான் இருக்கிறார்கள். ஜகன் மோகன் ரெட்டி, அகிலேஷ், ஓமர் அப்துல்லா, ஸ்டாலின், குமார சாமீ போன்ற எல்லா வாரிசு தலைவர்களும் வெளிப்படையாக நடந்து கொள்வார்கள் . வயதான தலைவர்கள் கூறுவதை கேட்பார்கள். இவர் எதையும் வெளிப்படையாக கூற மாட்டார் . வயதானவர்களை மதிக்க மாட்டார். தி மு க வினர் கோபாலபுரம் காம்பௌண்டில் தலைவர்களை தேடுவது போல் காங் ஜன்பத் சாலையில் தலைவரை தேடுகிறது பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இனிமேல் சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், வாசன் போன்ற தலைவர்களுக்குத்தான் கஷ்டம்
""மோடி"" அவர்களே ஒரு வேளை ""ராகுல்"" என்ற ஒரு வேட்பாளரை எதிர்க்க உங்கள் கட்சி உங்களை நிறுத்த முடிவு செய்தால் , அந்த தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றியடைய வைக்ககூடிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு , வேறு ஒருவரை வெற்றியடைய வையுங்கள் , நீங்கள் ராகுலை எதிர்த்து தேர்தலில் நின்றால் அது சரியானதாக அமையாது, அதாவது ""குத்து சண்டை மேடையில் ,ஆட்டுக்குட்டியை எதிர்த்து சண்டை போடும் யானை"" போன்று இருக்கும். யானை பலம் கொண்ட உங்களைபோன்றவர்கள் ஆட்டுக்குட்டியிடம் போட்டியிடலாமா ==== வேண்டாம் === IPKF இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றுருந்த பொழுது நமது ராணுவ தளபதி இலங்கை சென்று தமிழர் பகுதிகளில் ""நல்லூர் கந்தசாமி கோயில் பூசாரியிடம்"" { ஒரு ராணுவ தளபதி மற்ற நாட்டு தளபதியிடம் தான் பேச்சிவார்த்தை நடத்துவார்கள், ஒரு நாட்டு வெளியுறவு அமைச்சர் மற்றநாட்டு வெளியுறவு அமைச்சருடந்தான் பேச்சிவர்த்தை நடத்துவார்கள்=== இதுதான் மரபு ) பேச்சி நடத்தினார் , அதுபோல் ஆகிவிடும் === ஆகவே ராகுலை எதிர்த்து போட்டியிடுவது நல்லா இருக்காது ============= நன்றி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.