வாஷிங்டன்: விமானத்தின் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, டிரீம்லைனர் விமான விற்பனையை போயிங் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. போயிங் நிறுவனம் சமீபத்தில் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட டிரீம்லைனர் 787 ரக விமானங்களை அறிமுகம் செய்தது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் இத்தகைய விமானங்களை போட்டி போட்டு வாங்கின. ஏர் இந்தியா சார்பில் 6 டிரீம்லைனர் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான டிரீம்லைனர் விமானத்தில் திடீர் புகை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அதன் பேட்டரியில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பேட்டரி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள டிரீம்லைனர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய டிரீம்லைனர் விமானங்களை விற்பனை செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.