நமது இணையதளத்திற்கும் இளைஞர்களுக்கும் இப்போது ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு உள்ளது. தங்களுக்கான தளமாகவும், களமாகவும் தினமலர்.காமை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
அந்த இளைஞர்களில் ஒருவர்தான் சைமன் ஜோசப்.
சேலத்தைச் சேர்ந்தவர் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் முதுகலை படிப்பு படித்துவருகிறார்.
தன்னுடைய ஏழு வயதில் "மரப்பாச்சி பொம்மை' என்ற வார்த்தையை மனதிற்குள் வாங்கியவர், அதற்கான தேடலை கடந்த வருடம்தான் நிறைவு செய்தார்.
இதற்காக தென்காசியில் ஆரம்பித்த இவரது பயணம் கடைசியில் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் போய் முடிந்தது.
ஒரு காலத்தில் செம்மரத்தில் செய்யப்பட்ட இந்த ஆண், பெண் மரப்பாச்சி பொம்மைகள், செம்மரம் வெட்டுவது தடைசெய்யப்பட்டு உள்ளதால் இப்போது கிடைக்கும் மரத்தில் செய்யப்படுகிறது. முன்பு விரும்பி வாங்கப்பட்ட இந்த பொம்மைகள் இப்போது தேவைக்கு ஏற்ப , வெகு சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த தேவையும் தற்போது குறைந்து கொண்டே வருகிறது என்பது மரப்பாச்சி பொம்மைக்கு ஏற்பட்டுள்ள சோகம்.
இப்படி காலம் மறந்த மரப்பாச்சி பொம்மை பற்றி தனி நபராக ஆவணப்படம் எடுத்துள்ள சைமன் ஜோசசப் நல்ல புகைப்படக்கலைஞரும் கூட. அவர் எடுத்த படங்களை பார்த்த போது நமது பொக்கிஷம் பகுதிக்கு ஏற்புடையதாக இருந்தது.
காணொளி ஊடகத்தின் வாயிலாக நிறைய சாதிக்க வேண்டும் என்ற தாகமும், வேகமும் கொண்டுள்ள சைமன் ஜோசப் தனக்கான இலக்கினை விரைவில் எட்டிப்பிடிப்பார் என்பது அவரது அசாத்திய வார்த்தைகளில் இருந்தே தெரிந்தது.
சைமன் ஜோசப்பின் படங்களை முழுமையாகக் காண சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ காலரி பகுதியை கிளிக் செய்யவும். அவரை தொடர்பு கொள்ள எண்:8807729201
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.