வோஸ்கோ: கடந்த சில நாட்களுக்கு முன்னர்,கோவாவின் தெற்கு பகுதியில் உள்ள வோஸ்கோ நகரில் பள்ளி கழிப்பறையில் 7 வயது குழந்தை கற்பழிக்கப்பட்டார். மர்மகோவா துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், துறைமுகம் சார்பில் உயர் அதிகாரி ஒருவர் மாணவி நலம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது, அக்குழந்தையின் தந்தையை பார்த்து,உங்கள் மகளை பார்ப்பதற்கு ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை என கூறியுள்ளார். இதனால் அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அக்குழந்தையின் தந்தை கூறுகையில், அதிகாரியின் கருத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனது மகளை பார்த்து எவ்வாறு அப்படி கூறலாம். அவள் உயிருக்காக போராடி வருகிறார். அவரின் இந்த கருத்து, எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.