Mani Shankar Aiyar faces flak for 'cats and dogs' remark against BJP leaders | நாய், பூனை என பா.ஜ.,வினரை விமர்சித்த மணி சங்கருக்கு எதிர்ப்பு| Dinamalar

நாய், பூனை என பா.ஜ.,வினரை விமர்சித்த மணி சங்கருக்கு எதிர்ப்பு

Updated : ஜன 19, 2013 | Added : ஜன 19, 2013 | கருத்துகள் (26)
Advertisement
Mani Shankar Aiyar faces flak for 'cats and dogs' remark against BJP leaders நாய், பூனை என பா.ஜ.,வினரை விமர்சித்த மணி சங்கருக்கு எதிர்ப்பு

புதுடில்லி: பா.ஜ.,வினர் நாயும் பூனையும் போல் சண்டையிட்டுக்கொள்கின்றனர் என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் ஐயரின் கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிசங்கர் ஐயர் மனநிலை சரியில்லாதவர் போல செயல்படுவதாக பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஜெய்ப்பூரில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பா.ஜ.,வில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், ராகுல் நிலை குறித்து சில காங்கிரஸ் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், முதலில் பா.ஜ.,வினர் தங்களது பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்கட்டும். அவர்கள் எப்போதும் நாயும் பூனையும் போல் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பா.ஜ., சார்பில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அக்கூட்டணி நிச்சயம் தோற்று, காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கூறினார்.


மணிசங்கர் ஐயரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வினரை நாய், பூனை என அவர் விமர்சித்துள்ளதற்கு பா.ஜ., தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிசங்கர் ஐயரின் கருத்துக்கு பதிலளித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான கீர்த்தி ஆசாத், மணி சங்கர் ஐயரின் இந்த கருத்து, அவர் மனநிலை சரியில்லாமல் இருப்பதையே காட்டுகிறது. அவர் எவ்வாறு நாய், பூனை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவர்கள் எல்லாம் (காங்கிரசார்) ஒரு குடும்பத்தின் செல்லப்பிராணிகளாக உள்ளனர் என்று நான் கூட கூறலாம். இதற்கு மணி சங்கர் ஐயர் என்ன கூறுகிறார் என எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் முக்கிய இரண்டு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இவ்வாறு பேசிக்கொண்டது, அரசியல் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-201317:17:20 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி ஐயோ ஐயோ
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
19-ஜன-201322:24:42 IST Report Abuse
g.k.natarajan இவர் பிறந்த நாடு பாகிஸ்தான்,அதனால்தான் எப்பொழுதும் அதனை ஆதரித்து பேசுவார் நல்ல படித்தவர் ஆனால், நாகரீகமற்ற வார்தகளைகளை உதிர்க்கும் இவர், ஒரு ராஜீவ் காந்தி, விசுவாசி இதை தவிர இவருக்கு தமிழ்நாட்டிலேயோ,டெல்லியிலோ,ஒரு மதிப்பும் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
19-ஜன-201320:29:41 IST Report Abuse
p.saravanan தைரியமாக சொல் நீ மனிதன் தானா ... இல்லை நீதான்... ஒரு
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
19-ஜன-201320:14:29 IST Report Abuse
ram prasad எதிர்த்தது நாயும் பூனையுமா ?
Rate this:
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
19-ஜன-201319:43:26 IST Report Abuse
Varatharajan தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர்கள் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துமையாக சந்தோசமாக இல்லை, ஒரு கருத்தை ஒற்றுமையாக ஏற்றுக் கொள்வதோ,பேசுவதோ இல்லை இந்த லட்சணத்தில் அடுத்த வீட்டு பிராணிகளை பற்றி பேச போய்விட்டார். இங்கே பல ஆயிரகணக்கான ஓட்டைகள் உண்டு ஏன் சொந்த மாநிலத்தில் தங்கி மக்கள் பிரச்சினையை கவனிக்கிறார்களா யாரவது? பாராளுமன்ற உறுப்பினர் ஆனதும் டெல்லியில் தான் குடி இருக்கிறார்கள், நான் அவசரமாக டெல்லி போறேன் நான் வந்ததும் பார்க்கிறேன், டெல்லி மேலிடம் அழைப்பு பிறகு பார்க்கலாம் இப்படி பேசி தட்டிக் கழிக்கிறார்கள். தனது வேண்டியவர்களுக்கு, சொந்தங்கள் பிழைக்க வழி வகைகள் செய்துக் கொண்டு அனைவரும் டெல்லியிலே குடி, குடியும் குடித்தனமும் ஆக காலங்கள் ஓட்டி காங்கிரசை அளித்து விட்டார்கள். தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, உன்னத தலைவர், கர்ம வீரர் காமராஜ் ஆட்சி என்று பெயர் அளவிற்கு சொல்லி கொஞ்சம் கூட மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பேசி வருகிறார்கள். உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் தமிழகம் இருட்டில் தவிக்கிறது கடந்த ஒருவருடமாக. அவர்கள் காங்கிரஸ், மற்றும் மக்கள் மீது அக்கறை உள்ளவர்களானால் மின் துறையில் எங்கே குறை ஏற்ப்பட்டது அதை மாண்பு மிகு பிரதமர் முன் நிறுத்தி பிரச்சினையை கட்சி வேறுபாடு இன்றி தீர்த்து, மின்சாரத்தை மேலும் அதிகரித்து தொழில், தொழிற்ச்சாலைகளின் உற்பத்தியை குறைபாடு இல்லாமல் உற்பத்தியை பெருக்கி, வீடுகளுக்கு, விவசாயத்திற்கு, மின்சாரம் தந்து மற்றும் விவசாத்திற்கு காவிரி தண்ணீர் குறைகளை களைந்து மக்கள் மனதில் சிறு துளியாவது இடம் பிடித்து இருப்பார்கள். இப்பொழுது காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்ற கேள்வி குறியில் இருக்கிறது தமிழகம்
Rate this:
Share this comment
Cancel
Vettipasanga - Chennai,இந்தியா
19-ஜன-201319:12:45 IST Report Abuse
Vettipasanga ""ஜெய்ப்பூரின், பிர்லா ஆடிட்டோரியத்தில், "சிந்தன் ஷிவிர்' கூட்டத்தை துவக்கி, கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: வரும், 2014 லோக்சபா தேர்தலுக்கு, கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். மக்கள், நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒற்றுமையாக செயல்பட முடியாததால் தான், சில நேரங்களில் தோல்வியை சந்தித்துள்ளோம் என்பதை மறக்காதீர். எனவே, தங்களின் தனிப்பட்ட குறிக்கோளை மறந்து, கர்வத்தை கைவிட்டு, ஒற்றுமையாகவும், ஒரு மனதுடனும், கட்சி முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்."""- மணிசங்கர் மாமா , இத சொன்னது இத்தாலி நாட்டு ராணி..
Rate this:
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
19-ஜன-201319:09:14 IST Report Abuse
Seshadri Krishnan மனிசங்கரையர் மீடியாவின் கவனத்தை கவர்ந்தாலன்றி இவரின் மீது லைம் லைட் இருக்காது. நான் இவரை (நேரு குடும்பத்தின் அடிமை) அடிப்படையில் எதிர்ப்பவன். ஆனால் நான் பிறந்து வளர்ந்த மாயூரத்திற்கு மற்ற எம்பிக்களைவிட அதிகம் செய்திருக்கிறார். மாயூர மக்கள் இவரை தோற்கடித்து நகரின் வளர்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் இவரை தேர்ந்தெடுத்து விடாதீர்கள். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்காது.
Rate this:
Share this comment
Cancel
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
19-ஜன-201318:57:57 IST Report Abuse
B.Vigneshkumar Whos ur party prime minister nominee ?
Rate this:
Share this comment
Cancel
PM Rani - new delhi,இந்தியா
19-ஜன-201318:12:53 IST Report Abuse
PM Rani ஒரு இத்தாலியரின் காலை வருடிக்கொண்டு இருக்கும் மணி ஷங்கர் ஐயர் போன்றவர்கள் இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்ட பிஜேபி ஐப் பற்றி கூறுவது கோமாளித்தனம். மணி ஷங்கர் ஐயர் ஒரு தனி மனிதர், பதவிக்காக காந்தி பெயரிட்ட ஒருவரின் காலைப் பிடித்துக்கொண்டு சுய மரியாதை இன்றி உயிர் வாழும் மனிதர்.
Rate this:
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
19-ஜன-201317:41:24 IST Report Abuse
Maali Raja நாயும் பூனையும் "நன்றியுள்ள" செல்ல பிராணிகள் என்பதை மறந்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை