ஊத்துக்கோட்டை: காதலனை திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்த நபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட மெதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் நந்தினி(22). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கும்மிடிபூண்டி தாலுகா, அயநல்லூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் பிரவீன் (25) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நேற்று பதிவு திருமணம் செய்ய முடிவு செய்து, பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனையறிந்த அவர்களது பெற்றோர்கள் வந்தனர். இதனைபார்த்த ஜோடி, தப்பி சென்றனர். இந்நிலையில், இன்று ஊத்துக்கோட்டை கோர்ட் வளாகத்தில் , இரு தரப்பு பெற்றோர்களும் வக்கீல் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நந்தினி, பிரவீணை தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் தாய்மாமன் ரவி என்பவர், மறைத்து வைத்திருந்த கத்தியால், நந்தினியின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த நந்தினி, ஊத்துக்கோட்டை மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.