ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் நாளை முதல் ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறினார். கோல்கட்டாவில் இருந்து மும்பை செல்வற்காக ஜன.,9ம் தேதி, பாம்பன் கடலுக்கு வந்த இரு கப்பல்கள், கடலுக்குள் இருந்த கற்களில் சிக்கின. ஜன.,13ம் தேதி அதிகாலை, கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றால், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல், நங்கூரம் இழுபட்டு ரயில் பாலத்தின், 121வது தூணை உடைத்து, தண்டவாளத்தை தாங்க வைக்கப்பட்டிருந்த இரும்பு கர்டரை சேதப்படுத்தியது.
வெடி வைத்ததாக வதந்தி: பாலம் தூணை சரி செய்வதற்காக, ஏழு நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஜன.,14ம் தேதி முதல், ரயில்வே உயர் பொறியாளர் குழு தலைமையில், ஊழியர்கள் 121வது தூண் இருபுறமும், தற்காலிக இரும்பு கிரீல் தூண்கள் அமைத்தனர். இதைதொடர்ந்து, சேதமடைந்த தூணை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று, தூணை சுற்றி "டிரில்' இயந்திரம் மூலம் துளைகளிட்டு, "பவர் ஜாக்' இயந்திரத்தில் இணைப்பு கொடுத்து (அடுத்தடுத்து இரும்பு சுத்தியலில் அடிப்பது போல்), தூணை உடைத்து தகர்த்தனர். அப்போது, லேசான சப்தத்துடன், சிமென்ட் தூசு புகையாக வெளியேறியதால், பாலத்தை வெடி வைத்து தகர்த்ததாக வதந்தி பரவியது. தகர்க்கப்பட்ட தூணை அகற்ற, தாமதம் ஆனதால், நேற்று பாலத்தில் ரயில் இஞ்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இன்று இன்ஜினை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாளை முதல் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை துவங்கும் என மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறினார். 15.கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.