மயிலாடுதுறை: டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையாறு மீனவர் கிராமத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் டீசல் பங்க் உள்ளது. இங்கு மீனவர்களின் படகுகளுக்கு மட்டுமே டீசல் சப்ளை செய்யப்படுகிறது. மற்ற யாருக்கும் கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, இங்கும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து பழையாறு மீனவர் சங்கம் விடுத்த அழைப்பின்பேரில் 300 வி சைப்படகு மற்றும் 700 பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் , இன்று மதியம் 3 மணி முதல் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.