Advertisement
ராகுலுக்கு மிகப்பெரிய பொறுப்பு; காங் தலைவர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,16:25 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,16:27 IST

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோஷம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிஆலோசனை கூட்டத்தில் வலுத்தது. சிந்தன் சிவிர் என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜோதிர்ஆதித்யா சிந்தியா, ராஜீவ் சுக்லா, ஜிதின் பிரசாதா மற்றும் மணிசங்கர் அய்யர் ஆகியோர், ராகுலுக்கு பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மிலிந்த் தியோரா கூறுகையில், இந்த கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு வழங்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது என கூறினார். முதல் நாளன்று, ராஜ்பாபர், அவ்தார் சிங் ஆகியோர் லோக்சபா பொதுத்தேர்தலை ராகுல் தலைமையில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இரண்டாவது நாள் மாநாட்டிற்கு முன்னர் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், 2014 பொதுத்தேர்தலை ராகுல் தலைமையில் சந்திப்போம். ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என கூறினார்.
ஜிதின் பிரசாதா கூறுகையில், இளைஞர்களை எவ்வாறு கட்சி பொறுப்புகளில் ஈடுபடுத்துவது என ஆலோசனை செய்யப்பட்டது. ராகுல் எங்கள் தலைவர். அவர் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ராகுல் தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் நிலையான தலைவர்கள் உள்ளது பற்றி பெருமைப்படுகிறோம். சிறந்த தலைவர்களின் தலைமையை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது என கூறினார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், நாங்கள் எங்களது கோரிக்கையை தான் வைத்துள்ளோம். இது பற்றி முடிவு செய்ய வேண்டியது சோனியா மற்றும் ராகுல் தான் என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Raju Rangaraj - Erode,இந்தியா
19-ஜன-201319:18:11 IST Report Abuse
Raju Rangaraj அப்படியே ராபர்ட் வடேராவை துணை பிரதமருக்கு உரிய வேட்பாளர் என கூறவும். பிரியங்காவை குத்தி அமைச்சராக்கி சிதம்பரத்தை அந்தமான் தீவுக்கு கவர்னராக்கவும். மன்மோகன் சிங்கை ஆந்திரா முதல்வர் வேட்பாளராக்கினால் [கொஞ்சம் கஷ்டமே ]தெலுங்கானா பிரச்னையை காதையும் கண்ணையும் மூடிக்கொண்டு தீர்த்து விடுவார். திக்விஜய் அண்ணனை ஜார்கண்ட் மாநில கவர்னராக்கினால் நக்சலைட் பிரச்னை தீர வாய்ப்புண்டு. காங்கிரஸ் இதையெல்லாம் சிந்திக்கவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.