வேலூர்: ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததால் விடிய, விடிய சோதனை நடந்தது. சென்னையை சேர்ந்த ஒருவரின் மொபைலுக்கு நேற்று , இரவு, 10 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ஆம்பூர் டவுன், தாலுகா, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் வெடி குண்டு வெடிக்கும் என இருந்தது. சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு இந்த தகவலை மொபைலுக்கு சொந்தக்காரர் கொடுத்தார். வேலூர் எஸ்.பி., ஈஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூரில் இருந்து வெடி குண்டு கண்டறியும் படையினர் மோப்ப நாய், "டைகருடன்' ஆம்பூர் விரைந்தனர். இன்று அதிகாலை, 1 மணியில் இருந்து, 5 மணி வரை, ஆம்பூரில் உள்ள தாலுகா, நகரம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை செய்தனர். இதில், வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. வெடி குண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.