Karna urges Centre not to notify Cauvery Tribunal award | காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகம் கடும் எதிர்ப்பு | Dinamalar
Advertisement
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகம் கடும் எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டம் பெங்களூருவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். சமீபத்தில் நடந்த காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்த கர்நாடகத்தின் நிலையை, மத்திய நீர்வளத்துறை செயலர், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரங்கநாத்திடம் கேட்டிருந்தார். எனினும் இதுகுறித்து கர்நாடக அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும் என்பதால், தன்னால் இதுகுறித்து கூற முடியாது என அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கூடி அரசிதழில் காவிரி நடுவர் மன்ற உத்தரவை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20-ஜன-201316:53:45 IST Report Abuse
சு கனகராஜ் அங்கு எந்த ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு யோசிக்கிறார்கள் காரணம் கன்னடர்கள் வெறியர்கள் நாமும் இந்தியாவில் தானே இருக்கிறோம் என்பது தெரியாமல் வெறியாட்டம் ஆடுகிறார்கள் ஆட்சியில் இருப்பவர்களும் அதற்கு தக்க ஆடுகிறார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ARJUN - USA (at present) ,யூ.எஸ்.ஏ
20-ஜன-201305:42:56 IST Report Abuse
ARJUN காவிரி ஆணையம், கண்காணிப்பு குழு, நடுவர் மன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்..பிரதமர்,மத்திய அரசு,இத்தனையும் தெண்டம்.கர்நாடகம் சொன்னதையே திரும்ப சொல்கிறது...கேட்பார் இல்லை. இதற்கு ஒரே வழி தான் உண்டு..கர்நாடகத்தில் அவசரநிலை பிரகடனம்..ஜனாதிபதி ஆட்சி...இப்படி செய்து வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.காரியமும் நிறைவேறும்.Rj
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201322:53:03 IST Report Abuse
Pugazh V கர்னாடக பா ஜ க வின் இந்த முடிவை மத்திய அரசிடம் வலியுறுத்த தினமலரின் பல வாசகர்களும் துணை நிற்ப்பார்கள். மேலும் பா ஜ க வினை ஆதரித்தும் பலரும் பேசுவார்கள், அவர்களையும் ஷட்டர் டெல்லிக்கு அழைக்கலாமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201321:56:44 IST Report Abuse
Pugazh V இத்தனைக்கு அப்புறமும் காங்கிரசை வசை பாடிக்கொண்டும், பா ஜ க வைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டும் ஆடும் சில தமிழர்களை என்ன சொல்வது? கலைஞர் சொல்லித் தான் கர்நாடக அமைச்சரவை இந்த தீர்மானம் போட்டது என்று கூட சிலர் சொல்வார்கள். மோடி பிரதமர் ஆக வேண்டும் என பிதற்றும் சிலரும் உண்டு. யார் ஆட்சியில் இருந்தாலும் இப்படித் தான் தீர்மானம் போடுவார்கள் என்றும் சிலர் சொல்லலாம். அநியாயம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
19-ஜன-201320:55:43 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM தண்ணீர் ..........இல்லாமல் ...........வாடும் .........எழைகளின்............கண்ணீர் .........துடையுங்கள் ............????
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
19-ஜன-201319:41:01 IST Report Abuse
Seshadri Krishnan நதிகளை இனைத்தாலொழிய இதற்கு தீர்வு காணமுடியாது. ராபி, பியாஸ், சட்லெட்ஜ் இவற்றிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை மற்ற நதிகளுக்கு திருப்பி விடலாம். நதிகள் இணைப்பை செயல்படுத்த முனையும் கட்சிக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
19-ஜன-201318:30:26 IST Report Abuse
Yoga Kannan இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கின்ற.... ஒரு மாநிலம் கன்னடாவாக தான் இருக்க முடியும் ... மனதில் ஈரமில்லா ஜடங்களே.... வாழுகின்ற போதே மனிதனாக இருக்க பழகி கொள்ளுங்கள் ...மிருகத்திடம் கூட ஈரம் இருப்பதை ஒரு சில நேரங்களில் நிருப்பித்து இருக்கின்றன....ஆனால் மனிதனில் இத்தனை வன்மங்கள் நிறைந்த மனிதர்கள் இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது... உங்களுக்கு ஆண்டவன் தருகின்ற தீர்ப்பு தான் சரியான தீர்ப்பாகும்.... ஊழி காலத்தின் முடிவில் இப்படியாப்பட்ட ஜன்மங்கள் தாய் நாட்டில் உருவெடுத்துள்ளது .....
Rate this:
0 members
0 members
61 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்