ராஞ்சி: ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரூட் 39 ரன்களும், பெல், பிரஸ்னன் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். காம்பீருடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இந்தியா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காம்பீர் 33 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கோஹ்லி அரைசதமடித்தார். அதிடியாக விளையாடிய யுவராஜ் சிங் 30 ரன்னில் போல்டானார். கோஹ்லியும் தோனியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியஅணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.