Advertisement
காங்., கூட்டம் இளைஞர்களுக்காக அல்ல ராகுலுக்காக: பா.ஜ.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,17:54 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,17:57 IST

புதுடில்லி: ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி கூட்டம் இளைஞர்களுக்காக அல்ல என்றும், ராகுலுக்காக நடத்தப்பட்டது என்று பா.ஜ., கூறியுள்ளது. இது பற்றி பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் குறைந்தளவே பேசப்பட்டு, அதிக கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து சோனியா கவலைப்படுகிறார். கடந்த 9 வருடங்களாக ஆட்சியில் இருந்த சோனியா தற்போது நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பம் குறித்து இப்போது பேசுகிறார். வரும் 2014ம் பொதுத்தேர்தலில் ராகுலை முன்னிறுத்த இந்த பிரச்னை தற்போது எழுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரசில் ராகுலுக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இது இளைஞர்களின் பிரச்னையா அல்லது ராகுலின் பிரச்னையா? நாட்டில் 51 சதவீதம் பேர் 25 வயதுக்கு குறைவானவர்கள். 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். எனவே சோனியா இளைஞர்கள் குறித்து பேசினார். விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் இளைஞர்கள் குறித்து சோனியா கவலை தெரிவித்துள்ளார் என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Pugal - Kovai ,இந்தியா
19-ஜன-201323:22:33 IST Report Abuse
Pugal பா ஜ க தலைவர்களே, இந்த ஜெய்ப்பூர் காங். கூட்டம் பற்றிப் பேசுவதெல்லாம் இருக்கட்டும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் உங்களின் கர்னாடக கூட்டம் பற்றி ஏதாவது சொல்லுங்களேன். அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-201318:25:19 IST Report Abuse
Tamilarasu Rajakkili பி.ஜே..பி. அப்பூக்களா.... உடனடியாக நீங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது... கட்கரி அவர்களின் சொத்து மதிப்பு .. எங்கேயிருந்து வந்தது... எப்படி பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானார்...ஏனென்றால் அந்த வழியை எல்லோருக்கும் சொன்னால் எல்லோரும் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி யாகி அப்பு நம்மலெல்லாம் சேர்ந்து பி.ஜே.பி யை நிரந்தர ஆளுங்கட்சியாகி விடலாம்... அப்பு சொல்லுங்க அப்பு... லேட் ஆகிறது....
Rate this:
5 members
0 members
2 members
Share this comment
BLACK CAT - Marthandam.,இந்தியா
19-ஜன-201318:17:16 IST Report Abuse
BLACK CAT ஆடு நனையுது என்று ஓநாயி அழுத கதை தான் சோனியா வின் கதை .....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.