சென்னை: சென்னையில், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட, முயற்சித்த, நான்கு பேர் கும்பலை கொடுங்கையூர் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து, 5 லட்ச ரூபாய் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட, ஒருவர் தப்பியோடினார். நேற்று நள்ளிரவு, வியாசர்பாடி பகுதியில் கள்ளநோட்டுகளுடன், ஒரு கும்பல் திரிவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மூலக்கடை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கார் ஒன்று, மாதவரத்திலிருந்து வியாசர்பாடி நோக்கி வந்தது; போலீசார் நிறுத்தச் சொல்லியும் கேட்காமல், கார் வேகமாக சென்றது. காரை போலீசார் பின் தொடர்ந்ததும், காரிலிருந்து, நான்கு பேர் கொண்ட கும்பல் இறங்கி தப்பியோடியது. அதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, அப்தூல் இஸ்மாயில் மட்டும் போலீசில் சிக்கினார். அவரிடம் விசாரித்த போலீசார் அப்துல் முனாப் மற்றும் வாசிம் ராஜா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். 5.03 லட்ச ரூபாய் கள்ள நோட்டு, போலீசார் பறிமுதல் செய்தனர். முகமது ரபீக் என்பவர், தப்பியோடினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.