ஜெய்ப்பூர்: இன்றைய காங்கிரஸ் கூட்டத்தில் ராகுலுக்கு துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இது வரை பொதுசெயலர்களில் ஒருவராக இருந்த வந்த இவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் துணை தலைவர் பதவியால் வரும் 2014 லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலேய காங்., மக்களை சந்திக்கும் என தெரிகிறது.
இதன் மூலம் இந்திய அரசியல் களத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. இளைய தலைமுறையை முன்னிறுத்த வேண்டும் என்ற குரல் காங்கிரசில் ஓங்கி ஒலிக்க துவங்கினாலும் இந்த கட்சியில் பழம் பெரும் மூத்த நிர்வாகிகள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமல் மனதிற்குள் வைத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய ஜெய்ப்பூர் கூட்டத்தில் ராகுலை மத்திய அமைச்சர் ஏ,கே., அண்டனி துணை தலைவராக முன்மொழிந்தார்.
இருப்பினும் வரும் தேர்தலில் இளைய தலைமுறையினருக்கு வழி திறக்கும் என்ற கோணமும் காங்கிரசில் மிளிர துவங்கியிருக்கிறது. இதன் காரணமாக வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுலை முன்நிறுத்தும் வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அரசியல் களம் ஒரு மாற்று களமாக இருக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், "அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை அறிவிக்க வேண்டும். கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்' என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தினர். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, "சிந்தன் ஷிவிர்' என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், "உட்கட்சி மோதல்களை தவிர்த்து விட்டு, ஒற்றுமையாக செயல்பட்டால் தான், அடுத்த லோக்சபா தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும்' என, மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இரண்டாவது நாளான நேற்று, கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தான், முக்கிய விஷயமாக முன் நிறுத்தப்பட்டார். கட்சியில் உள்ள, அவரது ஆதரவாளர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, ராஜிவ் சுக்லா, மணி சங்கர் அய்யர், ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா உள்ளிட்ட பலரும், "ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த தேர்தலில், அவரையே, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று இவருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்,. தலைவர் சோனியா இதற்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆச்சரியமில்லை என்கிறது பா.ஜ., : ராகுல் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் எந்தவொரு முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. இவர் எப்போதும் நம்பர் 2 வாகவே இருப்பார். இது ஒன்றும் எங்களுக்கு ஆச்சரியளிக்கவில்லை. அவர் நம்பர் 2 வாகவே இருப்பார். இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இளைஞர் காங்., வரவேற்பு ! : காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவி இன்று வழங்கப்பட்டதற்கு இளைஞர் காங்.,சிரசார் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். பிரமிக்க வைக்கும் முடிவு என்றும் கருத்து கூறியுள்ளனர். மேலும் டில்லியில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.