அனுப்பர்பாளையம்:நெருப்பெரிச்சல் ரேஷன் கடையில் நிரந்தர பணியாளர் இல்லாததால், பொங்கல் பொருட்கள், உள்தாள் மற்றும் பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. எனவே, நிரந்தர பணியாளர் நியமிக்கக்கோரி, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டு நெருப்பெரிச்சல் ரேஷன் கடையில் (எண்: 2082) 1,000 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம், ஜி.எம்., கார்டன், ஜெ.ஜெ., நகர், ராக்கியாகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்குகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன், இக்கடை விற்பனையாளர், வெளி மார்க்கெட்டில் பொருட்களை விற்பனை செய்ததாக உணவு தடுப்பு போலீசாரால் கைது செய்யப் பட்டார். இதனால், கடைக்கு நிரந்தர பணியாளர் இல்லை. கூலிபாளையம் ரேஷன் கடை பணியாளர் ஒருவர், வாரத்துக்கு ஒரு நாள் வந்து பொருட்கள் வழங்குகிறார். அவர் எப்போது வருவார்; கடை எப்போது திறந்திருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.பொங்கல் திருநாளுக்கு முன் கடையை திறந்த பணியாளர், பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் கூடுதல் தாள் இணைப்பு ஆகியவற்றை சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு, "நேரமில்லை; மீதி உள்ளவர்களுக்கு Œனிக்கிழமை (நேற்று) காலை வழங்கப்படும்,' என கூறி விட்டு சென்று விட்டார்.நேற்று காலை 8.00 மணிக்கு, பொங்கல் பொருட்கள் மற்றும் கூடுதல் இணைப்பு தாள் பெற 250க்கும் மேற்பட்டோர் கடை முன் கூடினர். 12.00 மணி வரை பணியாளர் வரவில்லை. ஆவேசம் அடைந்த பொதுமக்கள், நெருப்பெரிச்சல் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சமரசம் செய்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து நிரந்தர பணியாளர் நியமிப்பது குறித்து உறுதி கூற வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்றனர். நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளர் துரைசாமி அங்கு வந்தார். பொதுமக்களை சமாதானம் செய்து, உடனடியாக, ரேஷன் கடையை திறந்து பொருட்கள் வழங்க உத்தரவிட்டார். அடுத்த வாரம் முழுவதும் பணியாளர் நியமிக்கப்பட்டு, விடுபட்ட அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். அடுத்த மாதம் முதல் நிரந்தர பணியாளர் நியமிக்கப்படுவார் என கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.