tirupur district news | "டெக்பா டைஸ் அண்டுகெமிக்கல்ஸ்' திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"டெக்பா டைஸ் அண்டுகெமிக்கல்ஸ்' திறப்பு விழா

Added : ஜன 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:"திருப்பூர் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன்' (டெக்பா) சார்பில், வாலிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, "டெக்பா டைஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிட்.,' என்ற நிறுவன துவக்க விழா நடந்தது."டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். செயலாளர் அசோகன் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், நிறுவனத்தை திறந்து வைத்தார். "சைமா' பொது செயலாளர் பொன்னுசாமி, "டெக்மா' தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், "டிப்' தலைவர் மணி, "டீமா' தலைவர் முத்துரத்தினம், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் உதவி பொது மேலாளர் முகேஸ் மிர்புரி, குத்துவிளக்குஏற்றினர்.
"எகோ டெக்' என்ற முத்திரை சின்னத்தை (லோகோ), மிதுன்ராம் டெக்ஸ் உரிமையாளர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார். பிரின்டிங் பொருட்கள் விற்பனையை ரோட்டரி பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார். "லூகாஸ்ட் இன்கார்ப்' நிறுவன நிர்வாக மேலாளர் பாலசுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். ஏ.இ.பி.சி., முதன்மை இயக்குனர் ரெட்டி, "டெக்பா டைஸ் அண்டு கெமிக்கல்ஸ்' நிறுவன இணையதளத்தை துவக்கி வைத்தார்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் பேசுகையில்,""பீகார், ஒரிஷா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் இருந்து பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் உருவாக்கப்பட உள்ளனர்.""எப்.டி.ஏ., ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். "எகோ டெக்' என்ற பிரின்டிங் பொருட்கள், திருப்பூருக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தரமானதாக இருக்கும். பிரின்டிங் செய்ய தரமான பொருட்கள் உடனுக்குடன் கிடைக்கும்,'' என்றார்."டெக்பா' இணை செயலாளர் விக்டர், "டெக்பா டைஸ் அண்டு கெமிக்கல்ஸ்' மற்றும் "எகோ டெக்' பிராண்ட் குறித்து, இணை செயலாளர் விக்டர் விளக்கினார். வி.ஜி., குழும தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். "டெக்பா' துணை தலைவர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை