பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்டில், ஈரோடு லாரி உரிமையாளரிடம் ரூ.5.28 லட்சத்தை "அபேஸ்' செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.ஈரோடு அடுத்த மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மனோகரன், 53; லாரி உரிமையாளர். இவர், குடிமங்கலத்தில் ஒருவரிடம் நிலம் வாங்குவதற்காக, ஈரோட்டில் இருந்து நேற்று முன்தினம் பஸ்சில், மாலை 6.00 மணியளவில் பல்லடம் வந்தார்.குடிமங்கலம் செல்ல உடுமலை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கை இடுக்கில் வைத்திருந்த பேக்கை ஒருவர் திடீரென பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அதில், ரூ.5.28 லட்சம் இருந்துள்ளது. இதுகுறித்து மனோகரன் கொடுத்த புகார் அடிப்படையில், பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை "அபேஸ்' செய்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.