மதுரை: மதுரை, தெற்குவாசல் சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஏ.செல்லவேல், 57. பழைய அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்களை விற்பனை செய்து வருகிறார். நாணயங்கள் சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது சிறப்பு நாணயங்கள் வெளியிடும்போது, அவற்றை வாங்க மத்திய அரசிடம் விண்ணப்பிப்பார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டி, 1000 ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய அரசு, 1000 ரூபாய் நாணயம் வெளியிட்டது. அதை வாங்க, செல்லவேல் விண்ணப்பித்தார். இந்த நாணயம், தபால் மூலம் நேற்று அவருக்கு கிடைத்தது. ஒருபுறம் நாணய மதிப்பு, அசோகசக்கரம் மறுபுறம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது.
அவர் கூறுகையில், ""இதுபோன்று விசேஷமாக வெளியிடும் நாணயம் மக்கள் புழக்கத்திற்கு வருவதில்லை. இதைப் பெற 4500 ரூபாய் செலவிட வேண்டும். இப்படி, இரு நாணயங்கள் வாங்கியுள்ளேன்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.