Rs 1,000 crore! The additional cost to the price of diesel | டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ரூ.1,000 கோடி! | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (28)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மத்திய அரசு அறிவித்துள்ள மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள், மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், எட்டு கோட்டமாகவும், 21 மண்டலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம், 21 ஆயிரத்து, 625 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கோட்ட நிர்வாக இயக்குனர்கள், தங்களுடைய வருமானத்துக்குள், வரவு, செலவுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற நிதிக்கொள்கை பின்பற்றப்படுகிறது. அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், லாபம் கருதாமல், பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாலும், அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்கள், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாகவே அரசு போக்குவரத்துக்கழகம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. 2011 செப்டம்பர் மாதம், லிட்டருக்கு 5.53 ரூபாய் வரை, டீசல் விலை உயர்த்தப்பட்டதே பெரும் சுமையாக கருதப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 5,700 கோடி ரூபாயாக கடன் தொகைஉயர்ந்துள்ளது. போக்குவரத்து கழகங்கள் தவிப்பு : இந்நிலையில் தற்போது, மத்திய அரசு, டீசலுக்கு, 50 பைசா வரையும், மொத்த கொள்முதல் டீசல் விலையில், 11.91 ரூபாயும் உயர்த்தியுள்ளது. அரசு

போக்குவரத்து கழகங்கள், மொத்த கொள்முதல் அடிப்படையில், டீசல் வாங்குவதால், ஒவ்வொரு லிட்டரும், 11.91 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை, 49.06 ரூபாய்க்கு பெற்று வந்த டீசலை, இனி, 60.97 ரூபாய்க்கு பெற வேண்டியிருக்கும். நாளொன்றுக்கு பயணத்தேவைக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், 90 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இதற்காக, 22 லட்சத்து, 50 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றத்தால், தினசரி, இரண்டு கோடியே, 68 லட்ச ரூபாய் வரைகூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஓராண்டுக்கு, 978 கோடியே, 10 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலையேற்றம், மீண்டும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Advertisement


ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடி வரும் போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு, கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால், தமிழக அரசு, மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.-நமது சிறப்பு நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandian m - madurai,இந்தியா
20-ஜன-201319:20:14 IST Report Abuse
pandian m வர கடைசி நாட்களை பயன்படுத்துங்கள் விடுமுறை நாட்கள் போல. இரவு நேர சேவைகளை முறையான இடைவெளிகளில் தொடருங்கள். புறவழி சாலைகளை தவிருங்கள் . கூட்ட நேரங்களில் தொலைதூர டிக்கெட்டுக்கு தான் முதலிடம் தருவேன் என கூறாதிர்கள். சுமைகளை மறுக்காதிர்கள். அரசு உணவகங்கள் திறந்து அதில் சாப்பிட வையுங்கள். போதுமா? எப்படி நட்டம் வரும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
nsathasivan - chennai,இந்தியா
20-ஜன-201319:16:30 IST Report Abuse
nsathasivan தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன என்பதை கண்டறிய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
20-ஜன-201316:03:21 IST Report Abuse
N.KALIRAJ சரி.......இதுவரை...கட்டண உயர்வின் மூலம்.......எத்தனை ஆயிரம் கோடி...சம்பாதித்தீர்கள்....சம்பாதிக்கப் போகின்றீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
20-ஜன-201315:08:17 IST Report Abuse
N.KALIRAJ இப்போது உயர்த்தியுள்ள கட்டணத்திற்கு இன்னமும் 4 மடங்கு டீசல் விலை உயர்த்தினாலும் போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படாது.......யார் காதில் பூ வைக்கப் பார்க்கின்றார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
20-ஜன-201309:41:23 IST Report Abuse
குடியானவன்-Ryot அரசு பேருந்துகள் விபத்து காப்பிடு என்பதே செலுத்துவதில்லை அதனால் விபத்து ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று தான் இழப்பிடுகளை வாங்க வேண்டிருக்கிறது, பலமுறை இழப்பிடு வழங்காமல் நீதிமன்றம் அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும் கேவலங்களும் நடக்கிறது, தனியார் போல அரசு போகுவரத்து கழகங்கள் வரி கட்டுவதில்லை, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தொழிலாளர் பேரவை அன்று பலர் வேலை செய்யாமலே சம்பளம் வாங்குகிறார்கள். இதுபோல பல கேவலமான இழப்புகளை சந்திக்கும் அரசு பேருந்துகள் டீசல் விலை உயர்வாள் பெரிய நஷ்டம் ஏற்படபோவதில்லை...
Rate this:
Share this comment
Cancel
Global Citizen - சென்னை,இந்தியா
20-ஜன-201309:36:26 IST Report Abuse
Global Citizen எந்தவித முன்னறிவிப்பின்றி பேருந்து கட்டணத்தை ஏற்றினால் பிரச்சினை வருமென்று , தினமலர் மூலம் அம்மா கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி இது... இன்னும் சில நாட்களில் சத்தமில்லாமல் எல்லா அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயருமென்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... கூடிய விரைவில், இந்தியா எழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் வாழ வழியில்லாத நாடாக மாறிவிடும்... அப்போது காங்கிரஸ் காரர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்... இந்தியாவில் ஏழைகளே இல்லையென்று....
Rate this:
Share this comment
Cancel
Ramacahandran - chennai,இந்தியா
20-ஜன-201309:00:59 IST Report Abuse
Ramacahandran இது ஒரு பிரச்சினையா? டாஸ்மாக் டார்கெட்டை அதிகரிச்சு அதிலே டீசல் வாங்க வேண்டியதுதானே? எவன் குடிச்சு எக்கேடு கேட்டாலும் இந்த கழகங்களுக்கும் எந்த கவலையும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
20-ஜன-201308:08:16 IST Report Abuse
kamarud புதிய பஸ்கள் வாங்கி வாங்கியே போக்குவரத்து கழகங்களை போண்டியாக்கிட்டாங்க ...எல்லாம் மக்கள் தலைலதான் விடியப்போகுது ...மக்களே BE ரெடி TO PAY MORE
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
20-ஜன-201307:51:28 IST Report Abuse
jayabalan தத்தளிக்க வேண்டாம் தனியாரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு அதிலும் தலையிடாமல் தள்ளி நின்றாலே புண்ணியம் "நிர்வாக செலவுகள்" பாதியாய்க் குறைந்து விடும் நடக்குமா? எல்லாவற்றையும் தேசிய மயமாக்கிய அந்த புண்ணியவான்களே இன்று அனைத்தையும் அன்னியர் மயமாக்கும் போது இதை ஏன் செய்யக் கூடாது?
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
20-ஜன-201307:21:32 IST Report Abuse
naagai jagathratchagan ஆண்டது போதாதா ...மக்கள் மாண்டது போதாதா என்று சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மக்களிடம் கொள்ளையடிப்பது ஒரு கலை ...அதன் விலை டீசல் ....ஏற்கனவே தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்தியாச்சு. இந்த டீசல் விலை ஏற்றத்தை காரணம் காட்டி ..போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் மூழ்கும் நிலையில் உள்ளன என்ற காரணத்தை காட்டி ...பஸ் கட்டணம் உயரும் ...ஆனால் அரசியல் வாதிகள் மட்டும் எதைப்பற்றியுமே கவலை இல்லாமல் வாழ்கிறார்கள் ...எல்லாமே அவர்களுக்கு மலிவு விலையில் ...இன்னும் காசு கொடுக்காமலேயே கிடைக்கிறது ...சாதாரண மக்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டு அழுது கொண்டுதானிருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.