"புதிய ரயில்பாதை அமைக்க, மத்திய ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்ய, நான் தான் காரணம் என, பார்லிமென்ட் தி.மு.க., குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், "இல்லையில்லை, நான் தான் காரணம்' என, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கமும், குஸ்தி போட தயாராகியுள்ளனர்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதை போல, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சமரச பேச்சை, காற்றில் பறக்கவிட்டு, மீண்டும், டி.ஆர்., பாலுவே ஒரு அறிக்கையை விட்டு, வம்பு சண்டைக்கு அடித்தளம் அமைத்துள்ளார்.
டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், ""பொதுமக்கள் நலன் கருதி, புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சரிடம் தான் கேட்டுக்கொண்டதால் தான், தஞ்சை-பட்டுக்கோட்டை புதிய ரயில்பாதை அமைப்பு பணிக்கு, 47 கி.மீ., தூரத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு, பஞ்சாயத்துக்கு தயாராகியுள்ளார்.
பழனிமாணிக்கம் வெளியிட்டு உள்ள கடிதத்தில், ""தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே, புதிய ரயில்பாதை அமைக்கக்கோரி, தாங்கள் நேரிலும், கோரிக்கை மூலமும் மனுவை பலமுறை தெரிவித்தீர்கள். அதன் பயனாக, தாங்கள் மகிழ்ச்சியடையும் வகையில், தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே, புதிய ரயில்பாதை பணிக்கு, 290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அனுமதிக்கப்பட்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ""மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி பாதையை அகல பாதையாக்கும் பணியும் துரிதப்படுத்தப்படும். இப்பணியை துவங்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இருவரின் ஆதரவாளர்களும் இந்த பிரசாரத்தை முன்னிறுத்தி, மோதலுக்கு தயாராகி வருகின்றனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.