தயாராகிறது தமிழக தேர்தல் பட்ஜெட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழக அரசின், 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச திட்டங்களை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல், 2014ம் ஆண்டு, மே மாதத்துக்குள் நடக்க வேண்டும். 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்து, திட்டங்களை தேர்தலுக்கு முன் நிறைவேற்றுவது கடினம். பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அறிவிப்பாகவே நின்று விடும்; செயல்பாட்டுக்கு வராது. ஆனால், 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த, ஓராண்டு காலம் அவகாசம் இருக்கிறது.

வாக்குறுதி நிறைவேற்றம் : எனவே, வரக்கூடிய பட்ஜெட், மத்திய, மாநில அரசுகளுக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. தமிழக அரசை பொறுத்தவரை, தேர்தல் வாக்குறுதிகளான விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, 20 கிலோ விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு நான்கு கிராம் தங்கம், பசுமை வீடுகள் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன."ஓராண்டில் நூற்றாண்டு சாதனை' என, அ.தி.மு.க., விளம்பரத்@தாடு, லோக்சபா தேர்தல் பிரசாரத்தையும் அ.தி.மு.க., துவங்கி விட்டது. ஆனால், பருவ மழை பொய்த்தது, காவிரியில் எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காதது, மின்வெட்டு போன்றவை, பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை அரசு உயர்த்தி விட்டது. விலைவாசி உயர்வும் இதோடு இணைந்து கொண்டதால், மக்களின் வாழ்வாதார செலவுகள் கூடிவிட்டன.மத்திய அரசின் டீசல் விலை உயர்வே, விலைவாசி உயர்வுக்குக் காரணம் என, தமிழக அரசு கூறி வருகிறது. அதே நேரத்தில், காவிரி விவகாரம், மின்வெட்டை சீர் செய்தல் ஆகியவற்றில், மாற்றான் தாய் மனப்பான்மையில், தமிழகத்தை, மத்திய அரசு நடத்துகிறது எனவும், முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டி வருகிறார்.

வரியில்லாத பட்ஜெட் : மக்கள் மத்தியில், இந்த வாதங்கள் எடுப்படுமா என்ற நிலையில், 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மிகப்பெரிய ஆயுதமாக, தமிழக அரசு கருதுகிறது. விவசாயம், தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், பட்ஜெட் தயார் செய்யப்படும் என, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கான பணிகள் டிசம்பர் மாதமே துவங்கி விட்டன. வரியில்லாத பட்ஜெட்டோடு, புதிய நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் வகையில்
சலுகைகள், பட்ஜெட்டில் நிறைந்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதல் நிதிகிராமங்கள், நகரங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சாலை, குடிநீர், சாக்கடை, தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர் பார்க்ப்படுகிறது.தனித்து போட்டி என அறிவித்துள்ள நிலையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் மதிப்பை பெறுவது மிக முக்கியம். லோக்சபா தேர்தலில், "நாற்பதும் நமதே' என்ற குறிக்கோளுக்கு வலுசேர்க்கும் வகையில், பட்ஜெட்டை உருவாக்குவது அவசியம் என அ.தி.மு.க., தலைமை நினைக்கிறது.மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு பின்பே, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால், காங்கிரசின் தேர்தல் அணுகுமுறை, பட்ஜெட்டில் வெளிப்பட்டுவிடும். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பட்ஜெட் இருக்கும் எனவும், அ.தி.மு.க.,வினர் தரப்பில் கூறுப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201303:32:52 IST Report Abuse
தமிழ்வேல் // சலுகைகள், பட்ஜெட்டில் நிறைந்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர். // ஏற்கனவே செய்த அறிவுப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன...தேர்தலுக்காக ...இன்னும் இலவச சலுகைகள் செய்தால் தாங்க முடியாது...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201303:30:53 IST Report Abuse
தமிழ்வேல் திரு முக தொலைகாட்சி பெட்டிகள் கொடுத்து குடும்பத்து பெண்களை சோம்பேறி களாக்கினார் ( இது அதிமுக சொம்புகளின் கருத்து - ஆனால் இது உண்மையே) ... இப்போது டிவி அத்தியாவசத்தில் ஒன்றாகி விட்டது...இந்தம்மா அதற்கும் ஒருபடி மேல் போய்..... மிக்சி கிரைண்டர்ன்னு கொடுத்து இன்னும் சோம்பேறி களாக்கிவிட்டார் ... அவைகளும் அத்தியாவசமாக ஆகும்போது ஆஸ்பத்திரிகள்தான் நிறையும்... வீட்டுவேலைகள் இல்லாததால்.... இப்போதே ஆங்காங்கு உடற்பயிற்சிக்கு நிலையங்கள் முளைக்கின்றன... (அம்மாவே MLA க்களுக்கும் இந்த வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்)...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201303:24:49 IST Report Abuse
தமிழ்வேல் // பட்ஜெட், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச திட்டங்களை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது // நான் நினைக்க வில்லை... இலவச திட்டங்களை இந்தம்மா நம்பி இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்... இதுவரையில் அதிமுக சொம்புகள் கூட யாரும் (ஒருசமயம் 1 அல்லது 2 ஐ தவிர) இலவசத்திர்ற்கு ஆதரவாக அதுவும் அம்மாவின் இலவசத்திற்கு ஆதரவாக எழுதியதாகத்தெரியவில்லை...இதுவே ஒரு சாட்சி... இது மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.. ஒரு உருப்படியான திட்டம் இல்லாமல் மேலும் மேலும் இலவசத்தை திணிப்பதால் வரும் கேடுகள் அதிகம்.... இப்போது பலர் வேலையை இழந்துள்ளதால் உற்பத்தியான பொருட்களை வாங்கும் தெம்பு அற்று உள்ளார்கள்.. அதனால் அரசுக்கு வரி வருமானம் குறைந்து விட்டது.. தொழிர்ச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும் வருமானம் குறைவு... டாஸ்மாக்கை மட்டும் நம்பி ஆட்சி நடப்பது எந்த ஒரு தொலைநோக்கு திட்டங்களும் செய்யல படுத்த முடியாமல் போகின்றது....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201302:05:20 IST Report Abuse
தமிழ்வேல் விலைவாசி உயர்வுகளுக்கு டீசல் விலை ஏற்றம்தான் காரணம் என்றால் எதனால் டீசல் மீதுள்ள வரிகளை தமிழக அரசு முற்றிலும் நீக்கக்கூடாது ? பிரான்ஸ் நாட்டில் உள்ள எழிலனைக் கேளுங்கள்... அங்கு பஸ் லாரிகளுக்கு முழு வரியும் நீக்கப்பட்டுள்ளது.... அதோடு தொழிசாளைகளுக்கும் வரி சலுகை உள்ளன... தொழிற்சாலை வண்டிகள் 5.5 சத்தமே வரியாக செலுத்துகின்றன... மற்றவர் 19.6 சதத்திற்கு நேரடி வரியாகவும் மொத்தம் 45 சதம் மறைமுக வரிகளுடன் வசூலிக்கப்படுகின்றது.....
Rate this:
Share this comment
Cancel
Tamil A - chennai,இந்தியா
20-ஜன-201300:24:01 IST Report Abuse
Tamil A மின் உற்பத்திக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்குவார்கள் என மக்கள் எதிர் பார்க்கிறார்களா இல்லை இன்னும் எத்தனை விலையில்லா பொருள்கள் தருவார்கள் என எதிர் பார்க்கிறார்களா என தெரியவில்லை. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய வேண்டும் எனில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். செய்யுமா அரசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்