அனுமதி கொடுத்தாரா?
பொங்கல் திருவிழாவை ஒட்டி, "புதியபார்வை' ஆசிரியர் எம்.நடராஜன் ஏற்பாட்டில், தஞ்சாவூரில் தமிழர் கலை இலக்கிய திருவிழா நடந்தது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் பங்கேற்று, "காசவள நாட்டு காவியங்கள்' என்ற, சி.டி.,யை பெற்றுக் கொண்டார். தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பதவி வகிக்கும் அரங்கநாயகம், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். தி.மு.க.,வை பகிரங்கமாக எதிர்க்கும், நடராஜனின் விழாவில், அரங்கநாயகம் கலந்து கொண்டது, தி.மு.க.,வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ஆசியுடன் தான், அந்த விழாவில் பங்கேற்றார் என்ற தகவலும், அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது.
வாயை திறக்க வேண்டாம்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணனுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்குமான மோதல் அதிகரித்து வருகிறது. "ராமகிருஷ்ணன் கம்யூனிஸ்டே இல்லை' என கருணாநிதி விமர்சித்தார். இதற்கு, நேரடியான பதிலை சொல்லாத மார்க்சிஸ்ட் கட்சியினர், கருணாநிதியை விமர்சித்து, நாளிதழ் ஒன்றில் வந்த கட்டுரையை, தங்களது நாளேடான, "தீக்கதிரில்' பிரசுரித்து விட்டனர்.இக்கட்டுரையில், கருணாநிதிக்கும், கம்யூனிஸ்ட்டுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ரீதியில், கடும் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. "திட்டமிட்டு ஆத்திரமூட்டுகின்றனர். வா#ப்பு வரும் வரை, வாயைத் திறக்க வேண்டாம்' என, கட்சியை அமைதிப்படுத்தியுள்ளது தி.மு.க., தலைமை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.