ராமேஸ்வரம்: கப்பல் மோதி சேதமடைந்த, பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று, மூன்று முறை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. "இன்று முதல், பாம்பன் பாலம் வழி, ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்' என, மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறினார். இந்திய கடற்படைக்காக, ஜன., 9 ல், பாம்பன் கடலுக்கு வந்த இரு கப்பல்கள், பாறையில் சிக்கின. ஜன., 13 ல், சூறாவளி காற்றால், ஒரு கப்பல், பாம்பன் ரயில் பாலத்தின், 121 வது தூணை சேதப்படுத்தியது. பாலத்தில் பழுது பார்ப்பதற்காக, ஒரு வாரத்திற்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சோதனை ஓட்டம்: நேற்று முன்தினம், தூண் தகர்க்கப்பட்டது. நேற்று, தூணின் இருபுறமும் அமைக்கப்பட்ட இரும்பு கிரில்களின் பலம் சோதிக்கப்பட்டது. இதையடுத்து, மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்தில் மதியம் 2.40 மணிக்கு, மோட்டார் டிராலியில் சோதனை ஓட்டம் நடந்தது. பின், மண்டபத்தில் இருந்து புறப்பட்ட 95 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. சரி செய்யப்பட்ட தூண் மீது 10 கி.மீ., வேகத்தில் (வழக்கமாக 15 கி.மீ., வேகம்) இன்ஜின் கடந்து சென்றது. தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் சதீஷ்குமார், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி, ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத், கோட்டப் பொறியாளர் பன்னீர் செல்வம், மூத்த பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்காணித்தனர். சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததால், ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. பின், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சென்ற இன்ஜின், புவனேஸ்வர் ரயிலின் 21 காலி பெட்டிகளுடன், மீண்டும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.
மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறியதாவது: திட்டமிட்டபடி ரயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டத்தில் பிரச்னை இல்லை. இதனால் இன்று(ஜன.,20) முதல், அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் செல்லும். ஒரு மாதத்திற்குள், 121வது தூண் கான்கிரீட்டில் அமைக்கப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.