தமிழக, "108' அவசரகால ஆம்புலன்ஸ்களில் பணியாற்றி வரும் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்களின் சேவையை பாராட்டி, 108 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால், "108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை, மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், விபத்து மற்றும் அவசர காலத்தில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும், "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டு, சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, 604 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. இந்த ஆம்புலன்சில் ஒரு டிரைவர், உதவியாளர், இவர்களை தவிர நான்கு பேர் பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும், 3,000 பேர் பணியாற்றுகின்றனர்.ஆண்டுக்கு, 7.30 லட்சம் பேரின் உயிர் காக்கும் பணியில், இத்திட்டம் முக்கிய பங்கை வகிக்கிறது. கடந்த, 2012ம் ஆண்டில் நடந்த பல்வேறு சம்பவங்களில், உயிருக்கு போரடிய, 7,500 பேரை, கடைசி நிமிடத்தில் காப்பாற்றி சாதனை படைத்துள்ளது. இந்த உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்களை கவுரவிக்கும் வகையில், தற்போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மண்டலத்தில், 12 மாவட்டங்களை சேர்ந்த, 36 பேருக்கும், மதுரை மண்டலத்தில், 32 பேருக்கும், சென்னை மண்டலத்தில், 40 பேர் என, மொத்தம், 108 பேருக்கு விருது, சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
இந்த விருதுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் செயல்படும், "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மேலும் சிறப்பாக செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்டமேலாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், "108' அவசரகால ஆம்புலன்ஸ் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மொத்தம், 108 ஆம்புலன்ஸ்களுடன் சேவையை துவக்கிய இந்நிறுவனத்தில், தற்போது, 604 ஆம்புலன்ஸ் வரை, மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், முதல் கட்டமாக டிரைவர், உதவியாளர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இத்திட்டத்தை சிறப்பான முறையில் மக்களுக்கு சிறந்த சேவை அளிக்க முடியும். ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணியின் சிறப்பை மேம்படுத்தும் வகையில், மேலும் பல விருதுகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.