சண்டிகார்:"பயிற்சி ஆசிரியர்கள் நியமன மோசடி வழக்கில், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டுள்ள, அரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து நீடிப்பார்; 2014ல் அரியானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் துணை பிரதமரான, மறைந்த தேவிலாலின் மகன், ஓம் பிரகாஷ் சவுதாலா, 78. அரியானா முன்னாள் முதல்வர் மற்றும் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர். அரியானா முதல்வராக இவர் பதவி வகித்த போது, 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில், 3,206 இளநிலை பயிற்சி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.
அப்போது, பணி நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும், லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக, குற்றம் சாட்டப்பட்டது. சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கின் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில், சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரின் மகன், அஜய் சவுதாலா உட்பட, 55 பேர் குற்றவாளிகள் என, நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை, வரும், 22ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின், அரியானா மாநில தலைவரான அசோக் அரோரா, நேற்று சண்டிகரில் நிருபர்களிடம் கூறியதாவது:சவுதாலா மற்றும், 54 பேருக்கு எதிரான வழக்கில், டில்லி கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல; சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும். தண்டனை விவரம், வரும், 22ம் தேதி அறிவிக்கப்பட்டதும், அப்பீல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்கள், வழக்கில் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடையில்லை. அதனால், வரும், 2014ல் அரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஓம் பிரகாஷ் சவுதாலாவும், அவரின் மகன் அஜய் சவுதாலாவும் போட்டியிடுவர்.கட்சியின் தேசிய தலைவராகவும், ஓம் பிரகாஷ் சவுதாலா தொடர்வார்.இவ்வாறு அசோக் அராரா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.