சென்னை: தமிழகம் முழுவதும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான, போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று நடக்கிறது. தமிழகத்தில், கடந்த, ஒன்பது ஆண்டுகளாக,போலியோ நோயால், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையை தக்க வைத்துக் கொள்ள, தமிழகத்தில், இந்த ஆண்டிற்கான முதல் தவணை, போலியோ சொட்டு மருந்து இன்று தரப்படுகிறது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று, பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக, முக்கிய பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில், 1,013, நகரும் மையங்களும்; தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக, 771 நடமாடும் குழுக்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இம்முகாமில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, குறிப்பிட்ட மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். புதிதாக பிறந்த குழந்தைகள் உட்பட, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர், இன்று, தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும். இரண்டாவது தவணை போலியோ சொட்டு மருந்து, பிப்ரவரி, 24ம் தேதி, வழங்கப்படும். தமிழக அரசின் செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.