காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆகிய கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்களை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு, இதர தகுதிகளுக்குட்பட்டு, தமிழக அரசின் உதவித்தொகைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள், அலுவலக முத்திரையிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவசமாக வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும், வேலைவாய்ப்புகள் எதுவும் பாதிக்கப்படாது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காலாண்டிலும், முதல் இரண்டு மாதங்களில் மட்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு, உதவித் தொகை வழங்கப்படுகின்றன. அதன்படி வரும் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் நிறைவடையும் காலாண்டிற்கு, உதவித்தொகை கோரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 28ம் தேதிக்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில் சமர்பிக்கப்பட வேண்டும். அலுவலக முத்திரையிடப்பட்ட, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தொடர்ந்து உதவித்தொகை பெற, விண்ணப்பித்து ஓராண்டு முடிந்திருந்தால், இரண்டாம் ஆண்டின் துவக்கத்திலும், இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தால், மூன்றாம் ஆண்டின் துவக்கத்திலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, தான் எந்தவொரு நிரந்தரப் பணியிலும் இல்லை என, சுய உறுதிமொழி ஆவணம் வழங்க வேண்டும். குறித்த காலக்கெடுவிற்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறினால், உதவித்தொகை தொடர்ந்து வழங்குவது நிறுத்தப்படம், என, ஆட்சியர் சித்ரசேனன் தெரிவித்து உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.