பழநி: பழநி தைப்பூச விழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. நாளை காலை, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, யாகம் நடக்கிறது. கொடிப்படம் உட்பிரகாரம் சுற்றி வந்து, கொடிகட்டி மண்டபத்தை அடைந்த பின், காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். மலைக்கோயில், திருஆவினன்குடியில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழா, 10 நாட்களுக்கு நடக்கும். ஆறாம் நாளான, ஜன., 26 இரவு 7 மணிக்கு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும்.
ஜன., 27 ல் தைப்பூச விழா நடக்கிறது. அதிகாலையில் சுவாமி, சண்முக நதிக்கரையில் உள்ள தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். மாலை 4.20 மணிக்கு, தேரோட்டம் துங்கி, நான்கு ரத வீதிகளில் வலம் வரும். விழாவின் 10ம் நாளான ஜன., 30 ல், தெப்ப உற்சவம் நடக்கும். தினமும், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.