சென்னை: கேரள காவல் துறை இயக்குநர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். கேரள காவல்துறை இயக்குநர், கே. எஸ். பாலசுப்பிரமணியன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் கமிஷனர் ஜார்ஜுடன் கலந்துரையாடினார். அப்போது, போக்குவரத்து போலீசில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, இ- செலான் முறை, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு செயல்படும் முறை, சைபர் கிரைம் பிரிவு, போலீஸ் ரோந்து வானகங்களில் செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து, நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, "அங்கிருந்து தகவல்கள் எவ்வாறு ரோந்து வாகனங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகின்றன' என, கேரள, டி.ஜி.பி,. கே.எஸ். பாலசுப்பிரமணியன் கேட்டறிந்தார். போக்குவரத்து பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பொருத்தப்பட்டுள்ள, சி.சி.டி.வி., கேமரா மூலம், சென்னை நகரில் வாகன போக்குவரத்து இயக்கத்தை கண்காணிப்பதையும் பார்வையிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.