ராமேஸ்வரம்: "பாம்பன் பாலத்தில் கப்பல் மோதுவதை தவிர்க்க ரயில்வே, துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது,' என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறினார்.
கப்பல் மோதி சேதமடைந்த பாம்பன் ரயில் பாலத்தை, நேற்று பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது: ரயில்வே நிர்வாகம் புகாரின்படி, "கோல்கட்டா கார்ப்பரேஷன் ஷிப்பிங் மேனேஜ்மென்ட்' மற்றும் ஆதிநாத் இழுவை கப்பல் மாலுமிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க, தமிழக கடலோர காவல் படை, ரயில்வே நிர்வாகம் மற்றும் பாம்பன் துறைமுக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது, பாம்பன் கடலில் சிக்கி தவிக்கும் 162 டன் எடை கொண்ட "ஆதிநாத்' என்ற இழுவை கப்பலை மீட்பதற்காக தூத்துக்குடியில் இருந்து பொறியாளர்கள் வந்துள்ளனர். ஜன.,26ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மீட்பு கப்பல்கள் வரவிருக்கின்றன. நிபந்தனையுடன், கோல்கட்டா இழுவை கப்பல் மும்பை செல்ல வாய்ப்பு உள்ளது. கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் இழுவை கப்பல், ரயில் பாலத்தில் மோதவும் வாய்ப்புள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.