ஜெய்ப்பூர்:""உயர்த்தப்பட்ட டீசல் விலையை, திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை,'' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு ஒன்பதாக உயர்த்த, கடந்த வியாழக்கிழமை, மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அத்துடன், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும் கைவிட்டது.இதையடுத்து, டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசு என்ற அளவில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், நேற்று முன் தினம் உயர்த்தின.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெறும், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ள, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, 2002ம் ஆண்டிலேயே, அப்போது ஆட்சியில் இருந்த, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கைவிட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், டீசல் விலையை நிர்ணயிப்பது, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.நாட்டில் அதிக அளவில், பொதுமக்களால் பயன்படுத்தப்படும் எரிபொருள், டீசல் என்பதால், அதை விலை குறைவாக வழங்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, மானியம் வழங்கி வந்தது.
தொடர்ந்து மானியம் வழங்குவது இயலாத காரியம் என்பதால், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டுள்ளது.அதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசு உயர்த்தியுள்ளன. அதே நேரத்தில், ராணுவம், ரயில்வே மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழகங்கள், லிட்டருக்கு, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து, டீசலை வாங்க வேண்டும். இந்த விலை உயர்வில், மாற்றம் வரும் என்ற கேள்விக்கே, இடமில்லை.இவ்வாறு, வீரப்ப மொய்லி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.